மக்காச்சோளம் அதிகப்படியான ப்ரோடீன் நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைகள் வலுவான உடலமைப்பை பெறுவார்கள் , மேலும் அது பெண்கள், கர்ப்பிணி , பெரியவர்கள் என அனைவருக்கும் எடுக்க வேண்டிய முக்கிய உணவாகும் அதைவைத்து இடியப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மக்காச்சோளம் மாவு- ஒருகப்,
உப்பு சிறிதளவு,
நெய் – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் மக்காச்சோளமாவை மெதுவாக சேர்த்து, நெய் எல்லா மாவிலும் படும் படி கிண்டி வறுக்கவும்.
வறுத்த மாவை ஒரு அரை மணி நேரம் ஆறவைக்க வேண்டும் பின்பு மாவு நன்றாக ஆறியதும், ஓரு ஸ்பூன் நெய் , உப்பு, கொஞ்சம் வெந்நீர் விட்டு மாவை பிசையவும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா சாதம்! ரெசிப்பி இதோ!
தண்ணீர் முடித்த அளவு சூடாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இடிபாப்பம் மிருதுவாக இருக்காது.
பிசைந்த மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும். பிழிந்தமாவை 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
சிக்கன் பிரியாணிக்கு பதிலா புரோட்டின் சத்து நிறைந்த சென்னா பிரியாணி ட்ரை பண்ணலாம்.. ரெசிபி இதோ!
பின் இதனுடன் சர்க்கரை அல்லது தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம் அல்லது வெங்காயம் , காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து காரமான இடியாப்பமாக மாற்றியும் உண்ணலாம்.