குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா சாதம்! ரெசிப்பி இதோ!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க , வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்ய புதினா மிகவும் நல்லது. அதை வைத்து நாம் சாதம் , சட்னி என செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
புதினா – 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
கடுகு, உளுந்து – 1 தேக்கரண்டி
பட்டை – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நிலக்கடலை – 1 தேக்கரண்டி
முந்திரி – 10 எண்ணிக்கை
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
நெய் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து அதனுடன் பச்சை மிளகாய் & இஞ்சி சேர்த்து மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்து வந்தவுடன் முந்திரி & நிலக்கடலையை ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த புதினா கலவை, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

நாகர்கோவில் ஸ்பெஷல் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு- சுட்ட அப்பளம்.. இனி நம்ம வீட்டுலயும் செய்து சாப்பிடலாமா!

சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்து சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து பரிமாறலாம்.

இந்தப் புதினா சாதம் பள்ளி குழந்தைக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.