சுகர் இருக்குதா.. வாய்க்கு ருசியான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ..

By Velmurugan

Published:

கசப்பு தன்மை கொண்ட பாகற்காயை வைத்து ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என பல சமைக்கலாம். இதில் உள்ள கசப்பு தன்மையில் தான் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது . அதை வைத்து பாகற்காய் தொக்கு எப்படி சுவையாக செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 1 கிலோ

சின்ன வெங்காயம் – அரை கிலோ

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு

வெல்லம் – கால் கப்

கடுகு – 1 தேக்கரண்டி

வெந்தையம் – 1 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவையான அளவு

மழைக்கு சுடசுட குழந்தைகளுக்கு பிடித்தமான சாம்பார் இட்லி செய்து குடுங்க!

செய்முறை :

முதலில் பாகற்காயைக் கழுவி, விதைகளை நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தையம் போட்டு தாளித்து, பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கவும் , அது நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் ,மிளகாய்த்தூள், வெல்லம் அனைத்தையும் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேகவைத்து கிளறி இறக்கினால் பாகற்காய் தொக்கு ரெடி.

திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி ரெசிபி இதோ..

இதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் வாசனையாக இருக்கும்.