பெற்றோர்களே!! உங்கள் குழந்தைகள் உயரமா வளரணுமா?… கட்டாயம் இதை செய்யுங்கள்!

Published:

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாக வளர வேண்டும், உயரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சில குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற உயரத்துடன் இருப்பதில்லை. இந்த விஷயம் அவர்களின் பெற்றோருக்கு மிகவும் கவலை அளிக்கிறது. குழந்தைகள் வளராமல் இருப்பதற்கு பெற்றோரின் மரபணுக்கள் மட்டுமே காரணம் என்று பலர் நினைக்கிறார்கள்.

சரியான ஊட்டச்சத்து இல்லாமை, முறையான உடற்பயிற்சியின்மை, அவர்கள் வாழும் சூழல் ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எலும்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அவசியம். ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், போரான், வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்த உணவுகளை அவர்களின் உணவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் எந்த மாதிரியான உணவை கொடுக்க வேண்டும், எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்…

1. பால், பால் பொருட்கள்:

குழந்தைகளின் உணவில் பால் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பது, அவர்கள் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பால் பொருட்களை உட்கொள்வது உயரத்தை அதிகரிக்க உதவும் என அமெரிக்க தேசிய அறிவியல் நூலக ஆய்வு காட்டுகிறது. எலும்புகள் வலுவடையும். பால் பொருட்களில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின்கள் செல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே குழந்தைகள் தினமும் குறைந்தது இரண்டு கிளாஸ் பால் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. சோயா பீன்ஸ்:

சோயாபீன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சோயாவில் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. சிறு குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் ஃபோலேட், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. குழந்தையின் உணவில் வைட்டமின்-டி, கால்சியம் மற்றும் புரதத்தை நிரப்ப சோயா பால் கொடுப்பது நல்லது.

3. வைட்டமின் டி உணவுகள்:

வைட்டமின் டி குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரித்து, மறைமுகமாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. மாலை வெயிலில் உங்கள் குழந்தைகள் விளையாடுவதைப் பாருங்கள். மீன், காளான், முட்டை போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. கீரைகள்:

குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கீரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலை காய்கறிகளில் காணப்படும் வைட்டமின்கள் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுவாக்கும். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது. வளரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய வாரத்திற்கு இரண்டு முறை கீரைகளை வழங்குவது சிறந்தது.

5. நட்ஸ் வகைகள்:

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சத்தான மற்றும் ஆற்றல்மிக்க உணவு மிகவும் அவசியம். அதற்கு நட்ஸ் வகைகளை விட சக்தி வாய்ந்த உணவு எதுவும் இருக்க முடியாது. நட்ஸ் வகைகளில், கனிமங்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

6. உடற்பயிற்சிகள்:

குழந்தைகள் உயரமாக வளர ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உதவும் என்கின்றனர் நிபுணர்கள். நேராக நின்று கீழே குனிந்து கால்விரல்களைத் தொட்டு, கால்களை முன்னோக்கி நீட்டி உட்கார்ந்து, கால்களை விரல்களால் தொட்டு, மேல் உடலை இருபுறமும் வளைத்து செய்யப்படும் பயிற்சிகள் முதுகெலும்புக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இதன் மூலம் குழந்தைகள் உயரமாக வளர உதவுகிறது.

பார் ஹேங்கிங்ஸ், ஹேங்கிங் ராட், புல்அப்ஸ், சின்-அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் முதுகுத்தண்டை நெகிழ வைக்கும். இதன் மூலம், அவை எளிதில் உயரமாக குழந்தைகளுக்கு உதவுகிறது.

மேலும் உங்களுக்காக...