ஆறு மாசம் ஆனாலும் கெட்டு போகாத சாம்பார் பொடி! இனி வீட்டிலே செய்யலாம்!

By Velmurugan

Published:

சுவையான சாம்பார் செய்ய சாம்பார் பொடி மிகவும் முக்கியமானது. இதுவரை பொடியை நாம் கடையில் வாங்கி இருப்பீங்க. கடையில் வாங்கும் பொடியை விட சூப்பராக வீட்டிலே தயார் செய்யலாம்…

தேவையான பொருள்கள்:

மிளகாய் வத்தல் – 1/4 கிலோ

கொத்தமல்லி – 300 கிராம்

துவரம் பருப்பு – 50கிராம்

கடலைப் பருப்பு – 50 கிராம்

மிளகு – 25 கிராம்

சீரகம் – 100 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

பெருங்காயம் – 25 கிராம்

கடுகு – சிறிதளவு

செய்முறை :

முதலில் வத்தலை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளவும் , கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

பேக்கரியில் வாங்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி நம்ம வீட்டுலையும்! ரெசிபி இதோ !

இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். வாசனையும் சூப்பராக இருக்கும்.

காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

Leave a Comment