பற்களின் சொத்தையா? வீட்டிலே ஆயுர்வேத பற்பொடி தயாரிக்கலாம்..

By Velmurugan

Published:

பல் தேய்க்க இன்றைய கால கட்டத்தில் நாம் பேஸ்ட் பயன்படுத்துகிறோம், ஆனால் அதற்கு முந்தைய காலத்தில் பற்பொடி பயன்படுத்தி வந்தோம் ,பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆயுர்வேத பற்பொடி இனி வீட்டிலே தயாரிக்கலாம்.

நாம் பற்களின் ஆரோக்கியத்தை பேணிகாப்பது மிகவும் முக்கியம். பற்களை நாம் பாதுகாப்பதால் நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தடுத்து நிறுத்தத்தலாம்.

பற்களின் பிரச்னைகளில் முதன்மையானது மஞ்சள் நிற பற்கள். இதை நாம் சரி செய்ய வீடுகளே பற்பொடியை தயாரித்து பயன்படுத்துங்கள்.

பற்பொடி தயாரிக்க தேவையான பொருள்கள் :

ராக் உப்பு – 1 தேக்கரண்டி

கிராம்பு தூள், இலவங்கப்பட்டை தூள், அதிமதுரத்தூள் – தலா 1 தேக்கரண்டி

உலர்ந்த வேப்ப இலைகள், புதினா இலைகள் – சிறிதளவு

தயாரிக்கும் முறை :

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் மையாக அரைத்து கொள்ளுங்கள். அனைத்து பொருள்களும் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தயாரித்ததை காற்று போகாத வாறு மூடி வையுங்கள்.

உபயோகிக்கும் முறை :

ஒரு தேக்கரண்டி தயாரித்த பொடியை எடுத்து பற்களை தேயுங்கள். நன்றாக தேய்த்தவுடன் தண்ணீரில் வாய் கொப்பளியுங்கள். இதை இரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிய வரும்.

இதில் உள்ள கல் உப்பு பற்களுக்கு வெண்மையை தரும். அதிமதுரம்,வேப்பிலை ஈறுகளுக்கு வலிமையை தரும். பல் கூச்சத்தன்மை இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சரி செய்யும்.

பேக்கரியில் வாங்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி நம்ம வீட்டுலையும்! ரெசிபி இதோ !

இதை ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். மேலும் இது பக்க விளைவுகள் ஏற்படுத்தாது . வேப்பிலை பற்களின் கிருமி தொற்று ஏற்படுவதை தடுக்கிறது,வாய் துர்நாற்றம் பிரச்சனையை சரி செய்கிறது .பிரஸ் இல்லாமல் வெறும் விரல்களால் கூட இந்த பொடியை பயன்படுத்தலாம்.

Leave a Comment