கல்யாண விருந்து சாப்பாட்டில் இருக்கும் டேஸ்டான சாம்பார் ரெசிபீஸ்.. இனி வீட்டில்…

By Velmurugan

Published:

கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் சாம்பார் பொதுவாக மணக்க மணக்க சுவையாக இருக்கும். டேஸ்டான சாம்பார் ரெசிபீஸ்.. இனி நம்ம வீட்டில் செய்து பார்க்கலாம் …

தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு – 25 கிராம்
பாசிப்பருப்பு – 25 கிராம்
கடலைப்பருப்பு – 25 கிராம்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 4
சாம்பார் பொடி – 1 டீஸ்புன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்புன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்புன்
கடுகு – 1/2 டீஸ்புன்
உளுந்தம்பருப்பு – 1/2 டீஸ்புன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – 3 டீஸ்புன்

ரோட்டோர டீ கடைகளில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் ரெசிபி வேண்டுமா? இதோ!

செய்முறை:

கடாயில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு பொடி செய்து கொள்ளவும்.பின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

கடாயில் 2 டீஸ்புன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

உடல் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!

பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .  சுவையான கல்யாண சாம்பார் தயார்.

Leave a Comment