இட்லி சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்க இதை ட்ரை பண்ணுங்க!

Published:

இட்லி என்பது நாம் பெரும்பாலும் அனைவராலும் எடுத்து கொள்ள கூடிய ஒரு உணவாகும். இட்லி எந்த வயதானோருக்கும் ஏற்ற உணவு எந்த பாதிப்பையும் நம்மக்கு ஏற்படுத்தாது. அனைவரும் இட்லி என்றால் அரிசி மற்றும் உளுந்து இதை வைத்துதான் தயார் படுத்துவோம். ஆனால் ஒரே சுவையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் அது சிறிது நாள்களில் வெறுத்து விடுவார்கள். ஆகையால் வித விதமான இட்லி செய்து குழந்தைகளுக்கு நாம் மகிழ்ச்சியை கொடுக்கலாம். அவ்வாறு இட்லியில் ருசியான மசாலா ரவை இட்லி எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :-

ரவை – 2 கப்

புளிக்காத தயிர் – 1 கப்

நீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சமையல் சோடா – 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – தேவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 2 டேபிள் ஸ்பூ ன்

உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூ ன்

பெருங்காயம் – 2

வத்தல் மிளகாய் – 2

கறிவேப்பிலை – 10 இலைகள்

மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூ ன்

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

செய்முறை :-

மசாலா ரவை இட்லி செய்வதற்கு முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்0. புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும். தயிருடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் ரவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி செய்வதற்கு சற்று முன்பாக சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டுகளை எடுத்து அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைத்து, அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கவும். சிறுது நேரத்தில் மிகவும் சுவையான மிருதுவான மசாலா ரவை இட்லி ரெடியாகிவிடும்.

குழந்தைகளுக்கு வாயில் வைத்ததும் கரையும் ஸ்வீட் கார்ன் அல்வா!

மேலும் உங்களுக்காக...

Leave a Comment