இறுதி வரை பயத்தை காட்டிய பங்களாதேஷ்!! செமி பைனலுக்கு முன்னேறிய இந்தியா?

By Vetri P

Published:

தற்போது ஐசிசி வேர்ல்ட் கப் டி20 தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இரண்டு டீம்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு டீமில் ஆறு அணிகள் விதம் 12 அணிகள் விளையாடிக் கொண்டு வருகின்றன.

தற்போதைய Team A முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு போவது உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். எனவே அடுத்த இரண்டாவது அணியாக யார் அரையிறுதிக்கு தகுதி அவர்கள் என்பதற்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளுக்கிடையே பெரும் சவாலான போட்டி நிலவியது.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்தியா-பங்களாதேஷ் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் ஷஹீத் அல்ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் அடித்தது இதில் அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணி தோல்வி அடைந்து முடிந்து விடுமோ என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் அங்கு நிலவிய வானிலை காரணமாக போட்டியானது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்பு டி எல் எஸ் முறைப்படி பங்களாதேஷுக்கு 16 ஓவருக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் இறுதிவரை போராடியும் நிர்ணயத்தை இலக்க எட்ட முடியாமல் தோல்வியை தழுவினர்.

எனவே இந்திய அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று அரையிறுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Leave a Comment