குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளை வித்தியாசமாக செய்து கொடுத்தால் அதை விரும்பி சாப்பிடுவார்கள். புதுமையாக சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிள்காய் தூள் – 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 1
கரம்மசாலாத்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
முட்டை – 1
தோசை மாவு – 1 கப்
குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து அல்வா செய்யலாமா? புதுசா இருக்கே !
செய்முறை:
சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான சிக்கன் தோசை தயார்.