உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடைப்பிடிக்கவேண்டியவைகள் என்ன என்ன தெரியுமா?

உடல் எடையை குறைப்பதில் குடல் பகுதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக குடலில் உள்ள நச்சுகள் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும்.

நாம் தினசரி உணவுகளில் புரோபயோடிக் உணவுகளை எடுத்து வரவேண்டும். இதனால் குடல் சுத்தமாவதோடு, வயிற்றுப்பகுதியில் உள்ள ஊளைச்சதையை குறையும். மேலும் அடிவயிற்றுப்பகுதி குறையும்.

கடுமையான டயட் இருக்க முடியாதவர்கள், உணவுகளில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் உணவாக எடுக்க வேண்டும் . இதனால் அதிக பசி உணர்வு ஏற்படாது. தொடர்ந்து இப்படி நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு குறையும்.

டயட் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் மதுபானம் அருந்தக் கூடாது. அப்படி அருந்தினால் நீங்கள் இருக்கும் டயட்டால் எந்த பலனும் கிடைக்காது.

ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி போன்ற பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் நார்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

தீபாவளி பண்டிகைக்கு நம் முகம் பளபளக்க பராமரிப்புக்கான அழகு குறிப்புகள்! இதோ ..

தினமும் 8 மணி நேரம் இரவில் நிம்மதியாக தூங்கினாலே உடலில் ஏற்படும் பல பாதிப்புகள் குறைந்துவிடும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையாகவே உடல் எடையை குறைக்க நினைத்தால், சர்க்கரை கலந்த பானம், உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சேர்ப்பதால் கொழுப்பு அதிகரிப்பதோடு, சதை கெட்டியாகிவிடும். அதை குறைப்பது மிகவும் கடினம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.