குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து அல்வா செய்யலாமா? புதுசா இருக்கே !

நாம் இவ்ளோ நாளா குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து குலாப் ஜாமூன் தான பண்ணினோம், இந்த முறை புதுசா அல்வா செய்து பாக்கலாமா..
தேவையான பொருட்கள்:
குலாப் ஜாமூன் மிக்ஸ் – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்
முந்திரி – 2 தேக்கரண்டி(உடைத்தது)
நெய் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் . பின் ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் மிக்ஸ், நாட்டுச் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கட்டி விலமல் நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் கலந்து வைத்துள்ள குலாப் ஜாமூன் மிக்ஸ் கலவையை ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, சிறிது நெய்யை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும் வரை விடாமல் கிளறி விட வேண்டும். அந்த கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், இப்போ சுவையான குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா தயார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews