ஜப்பானில் உலகின் மிக வயதான பெண் டோமிகோ இடூகா மரணம்..புரேசில் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்

டோக்கியோ: ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டோமிகோ இடூகா 117 வயதில் உடல்நலக்குறைவால் இறந்தார். முன்னதாக உலகின் மிக வயதான மரியா பிரான்யாஸ் கடந்த ஆண்டு 117 வயதில் இறந்தார். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை…

World's oldest woman, Tomiko Itouka, dies in Japan: Grandma's luck in Brazil

டோக்கியோ: ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டோமிகோ இடூகா 117 வயதில் உடல்நலக்குறைவால் இறந்தார். முன்னதாக உலகின் மிக வயதான மரியா பிரான்யாஸ் கடந்த ஆண்டு 117 வயதில் இறந்தார். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை அதிக வயதுடைய முதியவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.

ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்கள் இப்போது 29.3% ஆக இருக்கிறார்கள். ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 36.25 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது ஜப்பான் நாடு. ஜப்பான் மொழி தெரிந்தாலே நல்ல சம்பளத்தில் அங்கு வேலை கிடைக்கிறது. ஜப்பானில் வேலை பெற ஜப்பான் மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டோமிகோ இடூகா. உலகின் மிக வயதான மரியா பிரான்யாஸ் கடந்த ஆண்டு 117 வயதில் இறந்தார். அதன் பிறகு 116 வயதான டோமிகோ இந்த சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார். டோமிகோவுக்கு 2 குழந்தைகள் மற்றும் 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். எனினும் கணவர் இறந்த பிறகு அவர் ஆஷியா நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் டோமிகோவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் சிகேரு இஷிபா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கானபரோ லூகாஸ் உலகின் மிக வயதானவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். இவர் டோமிகோவை விட 16 நாட்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுங்கு அடுத்தபடியாக இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், பின்லாந்து, ஜெர்மனி மற்றும் குரேஷியா ஆகிய நாடுகள் அதிக முதியவர்கள் உள்ள நாடுகளாக உள்ளன. இங்கு 20 சதவீதம் அளவிற்கு முதியவர்கள் உள்ளனர். ஜப்பானை ஒட்டியுள்ள தென் கொரியாவில்19.3 சதவீதம் மற்றும் சீனாவில் 14.7 சதவீதம் முதியவர்கள் வாழ்கின்றனர்.