உலகத்துலயே இதான் காஸ்டலி ஓவியமா.. 7 ஆண்டுகளாக இருந்த மர்மம்.. சவுதி இளவரசர் செஞ்ச தந்திரம்..

By Ajith V

Published:

உலகில் எப்போதுமே ஓவியங்கள் தொடர்பான விஷயங்களுக்கு பெரிய அளவிலான மதிப்பு உண்டு. உலக புகழ் பெற்ற ஓவியங்கள் பலவற்றிலும் சாதாரணமாக பார்க்கும் நபர்களின் பார்வைக்கு எதுவுமே இல்லாதது போல தோன்றும். ஆனால் கலை உணர்வு கொண்டு ரசிக்கும் மக்களிடம் அது பற்றி கேட்டால் பல மணி நேரத்திற்கு அதற்குள் இருக்கும் விஷயங்களை பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்.

அந்த அளவுக்கு ஓவியங்கள் பலரது மத்தியில் புகழ் பெற்று விளங்கும் சூழலில், உலகிலேயே விலை மதிப்புள்ள ஓவியம் ஒன்று 7 ஆண்டுகளாய் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருக்க அது பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

லியோனார்டோ டா வின்சி என்ற பெயரை சொன்னாலே உலகில் உள்ள பலரும் வியந்து தான் பார்ப்பார்கள். இதற்கு காரணம், டா வின்சி வரைந்த பல ஓவியங்கள் அவரது பெயர் சொல்லும் அளவுக்கு இன்றளவிலும் உலக அளவில் பேசு பொருளாக இருந்து வருகிறது. லட்சம், கோடி கணக்கில் டா வின்சி வரைந்த பல ஓவியங்கள் விலை மதிப்பில்லாத அளவுக்கு பலரின் கைவசம் இருந்து வருகிறது.

அப்படி டா வின்சியின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று தான் Salvator Mundi. இது சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் என்றும் கூறப்படும் நிலையில், இயேசு கிறிஸ்து முற்றிலும் மாறுபட்டு வேறொரு ஆடையில் இருப்பதுடன் ஒரு கையில் உலகம் போன்ற உருண்டை ஒன்றை வைத்துக் கொண்டிருப்பது போன்றும் டா வின்சியின் இந்த ஓவியம் அமைந்திருக்கும்.

அப்படி இருக்கையில், கடந்த 2010 ஆம் ஆண்டில் Salvator Mundi ஓவியம், பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு டா வின்சியின் இந்த ஓவியம் ஏலத்துக்கு வர, 450 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் பல கோடி மதிப்புள்ள இந்த புகைப்படம் அதன் பின்னர் எங்கே இருக்கிறது என்றும், என்ன ஆனதும் என்றே தெரியாமல் 7 ஆண்டுகள் ஓடி விட்டது.

உலகளவில் விலை மதிப்புள்ள ஓவியம் என கருதப்படும் Salvator Mundi, காணாமல் போன தகவல் பலரையும் பதற வைத்திருந்தது. இந்த நிலையில் தான் அதற்கான விடையும் சமீபத்தில் கிடைத்துள்ளது. சவுதியின் இளவரசரான முகமது பின் சல்மான் (Mohammed Bin Salman) இந்த ஓவியத்தை ஏலத்தில் வாங்கியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக ஜெனீவாவின் துறைமுகத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

இதனை விரைவில் சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் இருக்கும் அருங்காட்சியகத்தில் Salvator Mundi ஓவியத்தை வைப்பதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி சவுதி அரேபியாவில் உலகின் விலை மதிப்புள்ள ஓவியம் இருந்தால் வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு சிறந்த வழியாகவும் இது அமையும் என இளவரசர் முகமது பின் சல்மான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.