உலக தாய்ப்பாலூட்டல் வாரம் ஆகஸ்ட் 1-7: முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…

பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தை பிறந்த முதல் நாள் முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். தாய்ப்பால் தான் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கும், நோய்…

WBW

பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தை பிறந்த முதல் நாள் முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். தாய்ப்பால் தான் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் பெரும் பங்கு வகிக்கிறது.

தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன், தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் முகமாக 1991 ஆம் ஆண்டு முதல் உலக தாய்ப்பாலூட்டல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தாய்ப்பாலூட்டல் வாரம் (World Breastfeeding Week, WBW) தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், பிரச்சனைகளை கலந்தாலோசிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை 120 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் 79 நாடுகளில் 488 அமைப்புகள், 406,620 தனியார்கள் கலந்துகொண்ட 540 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக தாய்ப்பாலூட்டல் வாரம் 2024 தீம்
உலக தாய்ப்பால் வாரம் 2024 இன் கருப்பொருள் ‘இடைவெளியை மூடுவது: அனைவருக்கும் தாய்ப்பால் ஆதரவு’ என்பதாகும்.

WHO 2025 தாய்ப்பாலூட்டல் இலக்குகள்

இந்த காலகட்டத்தில் அழகு போய்விடும் என்பதர்க்காக இளம் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க தயங்குகிறார்கள். அப்படி தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது கூட மார்பக புற்றுநோய்க்கு ஒரு காரணம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பருவ அதிக எடை அதிகரிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், முதல் 6 மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் விகிதத்தை குறைந்தது 50% ஆக அதிகரிக்கவும்; குழந்தைப்பருவ விரயத்தை 5%க்கும் குறைவாகக் குறைத்து பராமரிக்கவும் ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளது.