1.30 கோடி சதுர அடி.. 1200 ஷாப்கள்.. Underwater Zoo.. உலகின் மிகப்பெரிய மால்..!

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசா, ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் இதுதான். ஆனால், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் எது என்று உங்களுக்குத் தெரியுமா? துபாயில்…

dubai mall

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசா, ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் இதுதான். ஆனால், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் எது என்று உங்களுக்குத் தெரியுமா? துபாயில் உள்ள The Dubai Mall தான்.

உலகின் ஷாப்பிங் தலைநகராகக் கருதப்படும் துபாயின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த மாலில், 1,200க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள், underwater zoo மற்றும் அக்வேரியம் உட்பட பல சிறப்பம்சங்களை கொண்டது.

1.3 கோடி சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மால், 50-க்கும் மேற்பட்ட கால்பந்துத் மைதானத்தை விட பெரியது. 2008 நவம்பர் 4ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த மாலுக்கு வருடத்திற்கு சராசரியாக 54 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 2023-ஆம் ஆண்டில் மட்டும் 105 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்த மாலின் சிறப்பம்சங்கள் இதோ:

மொத்த கடைகள்: 1,200+

உணவகங்கள்: 120

வாகன நிறுத்தங்கள்: 14,000 இடங்களுடன், வாலேட் மற்றும் கார் லொக்கேட்டர் வசதியுடன்

திரைப்படத் திரைகள்: 22 (Reel Cinemas), THX சான்றளிக்கப்பட்ட ஹால்களுடன்

Emirates A380 Flight Experience: விமான சிமுலேட்டர்

KidZania: 4–16 வயது குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா

Play DXB VR Park: 76,000 சதுர அடியில் VR மற்றும் விளையாட்டு அனுபவம்

Hysteria Haunted House: த்ரில் அனுபவத்தை தரும் பயமுறுத்தும் வீடு

Dubai Aquarium & Underwater Zoo: 300 வகையான கடல் உயிரினங்கள்

Dubai Fountain: இசையுடன் நடனமாடும் 6,600 ஒளி மற்றும் நீர் பொருட்காட்சி

இந்த மாலில் உள்ள தரைத்தள கடைகளுக்கு ₹23,000 – ₹1,16,430) வரை ஒரு சதுர அடிக்கு செலுத்த வேண்டும்.

சிறிய கிடியோஸ்க்கள்: AED 1,000 – 3,000

நடுத்தர கடைகள்: AED 2,000 – 4,000

பெரிய பிராண்டு கடைகள்: AED 4,000 – 5,000

மொத்தத்தில் The Dubai Mall என்பது வெறும் ஷாப்பிங் மால் மட்டுமல்ல. அது ஒரு முழுமையான அனுபவம், உலக அளவிலான வசதிகள், துல்லிய நிர்வாகம், மற்றும் பரிணாமமான பொழுதுபோக்கு வசதிகளுடன் உலகம் முழுவதும் இருந்து பயணிகளை ஈர்க்கும் முக்கிய மையமாக உள்ளது.