கிரீன்லாந்தை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்த்த… ஆனா ஐரோப்பா இப்போ துப்பாக்கியை தூக்கிருச்சு! விலைக்கு வாங்குறதுக்கு இது ரியல் எஸ்டேட் நிலம் இல்ல, ஒரு நாட்டோட மானம்! இந்தியா தான் துணிச்சலாக முதன்முதலில் அமெரிக்காவை எதிர்த்தது.. இப்போது இந்தியாவின் வழியில் ஐரோப்பிய நாடுகள்.. மிரட்டி பணிய வைக்க இது 90-களோட அமெரிக்கா இல்ல.. மிரட்டினால் ஓட வைக்கிற 2026களோட உலக நாடுகள்..!Global Pushback:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல், உலக நாடுகள் அனைத்தும் அவருக்கு அடிபணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய களநிலவரம் டிரம்ப் கணிக்காத திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மெக்சிகோ முதல் ஐரோப்பா வரை…

america vs europe

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல், உலக நாடுகள் அனைத்தும் அவருக்கு அடிபணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய களநிலவரம் டிரம்ப் கணிக்காத திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மெக்சிகோ முதல் ஐரோப்பா வரை பல நாடுகள் டிரம்பின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தங்கள் இறையாண்மையை காக்க துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, மெக்சிகோ தனது அண்டை நாடான கியூபாவிற்கு எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்திருப்பது, அமெரிக்காவின் பொருளாதார தடைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளை ஒடுக்க நினைத்தாலும், உலக நாடுகள் இப்போது அவருக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டன என்பதுதான் நிதர்சனம்.

ஐரோப்பாவை பொறுத்தவரை, கிரீன்லாந்து விவகாரம் ஒரு பெரிய அரசியல் சதுரங்கமாக மாறியுள்ளது. கிரீன்லாந்தை விலை கொடுத்து வாங்க துடிக்கும் டிரம்பிற்கு எதிராக, டென்மார்க் தனது ராணுவ வீரர்களை அங்கு நிலைநிறுத்த தொடங்கியுள்ளது. இதனுடன் பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு குடைக்குள் இருந்த ஐரோப்பா, இப்போது தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலே அமெரிக்காதான் என்பதை உணர்ந்துள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவை நம்பியிருந்த நாடுகள், இப்போது தங்களது ராணுவ பலத்தை சுயமாக பெருக்கி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

டிரம்பின் அணுகுமுறை மிகவும் விசித்திரமானது; அவர் எதையும் வியாபார நோக்கோடும், தனது நாட்டின் புவியியல் எல்லையை விரிவுபடுத்தும் எண்ணத்தோடும் அணுகுகிறார். இதற்கு முன்பு இருந்த அமெரிக்க அதிபர்கள் அதிகாரத்தை செலுத்த நினைத்தார்களே தவிர, மற்ற நாடுகளின் நிலங்களை கையகப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் டிரம்போ, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் அங்கிருக்கும் கனிம வளங்களை கைப்பற்ற துடிக்கிறார். அதே சமயம், ஐரோப்பாவிடம் ராணுவ உதவிக்காக அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ராணுவத்திற்காக செலவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். இது நாடுகளுக்கு இடையிலான நட்புறவை விட, ஒரு ‘பணப் பரிமாற்ற ஒப்பந்தம்’ போலவே உள்ளது.

இந்த உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகவும் முதிர்ச்சியடைந்ததாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பா தனது பிரச்சனையை உலக பிரச்சனையாகப் பார்த்த காலமெல்லாம் முடிந்துவிட்டது என்பதை ஜெய்சங்கர் அவர்கள் முன்பே எச்சரித்தார். இன்று ஐரோப்பா தனது பாதுகாப்புக்காக இந்தியாவை தேடி வரும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள ஐரோப்பிய ஒன்றியம் துடிக்கிறது. ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் சமமான தூரத்தை பேணும் இந்தியாவின் ராஜதந்திரம், இன்றைய நிச்சயமற்ற உலக சூழலில் மிக சரியான முடிவாக தெரிகிறது.

மறுபுறம், டிரம்பின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கேலிக்கூத்தாகவே முடிகின்றன. மெக்சிகோ கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் அமெரிக்காதான் இதற்கு அனுமதி வழங்கியது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். யாரும் அவரிடம் அனுமதி கேட்காத நிலையிலும், தனது கௌரவத்தை காக்க அவர் இத்தகைய நாடகங்களை ஆடுகிறார். அதேபோல், வெனிசுலா விவகாரத்தில் அமைதிப்பரிசு பெற்ற மச்சாடோவிடம் இருந்து அந்த விருதையே திரும்ப பெற சொன்னது டிரம்பின் அதிகார மிரட்டலுக்கு சிறந்த உதாரணம். இத்தகைய நடவடிக்கைகள் உலக அரங்கில் டிரம்பின் மதிப்பை குறைப்பதோடு, அமெரிக்காவின் செல்வாக்கையும் சிதைக்கின்றன.

முடிவாக, டிரம்ப் நினைத்தது போல உலகம் ஒருமுனை அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க தயாராக இல்லை. கிரீன்லாந்தை டிபெண்ட் செய்வதில் ஐரோப்பா காட்டும் வேகம், கனடா மற்றும் மெக்சிகோ போன்ற அண்டை நாடுகளின் எதிர்ப்பு ஆகியவை டிரம்பிற்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். 2026-ஆம் ஆண்டு என்பது உலக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையப்போகிறது. பழைய கூட்டணிகள் முறிந்து, புதிய அதிகார மையங்கள் உருவாகும் இந்த சூழலில், டிரம்பின் பிடிவாதமான கொள்கைகள் அமெரிக்காவையே தனிமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.