டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி, பெண் ஊழியர்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் அவர்களுக்கே தெரியாமல் சிறுநீரை கலந்து வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மருத்துவ நிறுவனத்தில் பல ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் ஒருவருக்கு பாலியல் நோய் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அந்த மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் எச்சரித்ததோடு, உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
தனக்கு பெண்களால் தான் பாலியல் நோய் ஏற்பட்டது என்ற ஆத்திரத்தில், அவர் பெண்களை பழிவாங்குவதற்காக அனைவருக்கும் அந்த நோயை பரப்ப திட்டமிட்டார். இதன் காரணமாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில், அவர்களுக்கே தெரியாமல் தன்னுடைய சிறுநீரை கலந்துள்ளார்.
பெண் ஊழியர்கள் தாங்கள் குடிக்கும் குடிநீரில் ஏதோ நாற்றம் அடிக்கிறது என்பதை கவனித்த நிலையில், ஒரு பெண் ஊழியர் மட்டும் தன்னுடைய வாட்டர் பாட்டில் அருகே மறைமுகமாக சிசிடிவி கேமராவை வைத்திருந்தார். அதில் அந்த குறிப்பிட்ட ஊழியர் சிறுநீரை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த துப்புரவு தொழிலாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தான் ஒரு பாலியல் நோயாளி என்று ஒரு பெண் கண்டுபிடித்துவிட்டதாகவும், ஒரு பெண்ணால் தான் இந்த நோய் வந்தது என்பதால், பெண்களை பழிவாங்க இவ்வாறு செய்தேன் என்றும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.