பிரிட்டனை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், “தான் வாழ்க்கை முழுவதும் ஏழையாக வாழ விரும்பவில்லை, இளம் வயதிலேயே பணக்காரியாக மாற விரும்புகிறேன்” என்பதற்காக, தனது 18 வயது கன்னித்தன்மையை சுமார் 18 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல நடிகருக்கு ஏலம் விட்டுவிட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”சுகர் பேபி” என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட அந்த மாணவி, பிரிட்டனைச் சேர்ந்த மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த லாரா என்பது தெரியவந்துள்ளது. தனது கன்னித்தன்மையை அதிக தொகைக்கு ஏலத்தில் விட விரும்பிய நிலையில், ஒரு பிரபல நடிகர் அந்த ஏலத்தை எடுத்ததாகவும், அவருடன் ஒரு தீவுக்கு சென்றதாகவும் அங்கு தான் தனது கன்னித்தன்மையை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 18 கோடி ரூபாய் சம்பாதித்த நிலையில், அதன் பின்னரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக கூறியுள்ளார்.
“நான் எடுத்த இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை” என்றும், தன் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள் தன்னுடன் பழக விரும்பினால், நாள் ஒன்றுக்கு 32 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“நான் ஏழையாக வாழ விரும்பவில்லை. பணக்கார வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே எனது கன்னித்தன்மையை விற்றேன். இந்த முடிவில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த செயலில் வாழ்த்துக்களும் கண்டனங்களும் இருவிதமான கருத்துக்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.