140 கோடி மக்கள் தொகை இருக்கீங்க.. எங்களிடம் மக்காச்சோளம் வாங்குங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா.. உன்னோட மக்காச்சோளம் எங்களுக்கு தேவையில்லை, அதிரடி காட்டிய இந்தியா.. வல்லரசையே கதற விட்ட இந்தியா..!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்க வணிகச் செயலாளர் ஹாவர்ட் லூட்னிக், இந்தியா மீது புதிய புகாரை முன்வைத்துள்ளார். அமெரிக்க செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியா…

corn

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்க வணிகச் செயலாளர் ஹாவர்ட் லூட்னிக், இந்தியா மீது புதிய புகாரை முன்வைத்துள்ளார். அமெரிக்க செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியா ஏன் எங்களிடம் இருந்து சோளம் வாங்க மறுக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவரான லூட்னிக், இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் வரிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த உறவு ஒரு வழிப்பாதை. இந்தியா எங்களுக்கு தங்களுடைய பொருட்களை விற்று பயனடைகிறார்கள், அதே நேரத்தில் 140 கோடி மக்கள்தொகை இருக்கும் இந்தியா, ஏன் ஒரு கிலோ கூட மக்காச்சோளம் எங்களிடம் வாங்க மறுக்கிறது என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார். மேலும், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் மிகவும் எளிமையானது. இந்தியாவுக்கு அமெரிக்க சோளம் தேவையில்லை. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன:

இந்தியா தனது சொந்த தேவைக்கு தேவையான சோளத்தை உற்பத்தி செய்கிறது. இந்த நிதியாண்டில், இந்தியாவின் சோள உற்பத்தி 42 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் நமது நுகர்வு 42.7 மில்லியன் டன்களாக உள்ளது. இதனால், இந்தியா சோள உற்பத்தியில் கிட்டத்தட்ட தன்னிறைவு அடைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக இந்தியா ஒரு மில்லியன் டன் சோளத்தை இறக்குமதி செய்தது. ஆனால், இந்த இறக்குமதி அமெரிக்காவிலிருந்து செய்யப்படவில்லை. மாறாக, மியான்மர் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் விளையும் சோளம் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்ட வகையை சேர்ந்தது. ஆனால், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் உயிரியல் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விலங்குகளை வளர்ப்பதற்காக கூட அமெரிக்க சோளத்தை இறக்குமதி செய்ய இந்திய அரசு மறுத்து வருகிறது. எனவே, இந்தியா சோளம் இறக்குமதி செய்ய முடிவு செய்தாலும், அமெரிக்க சோளம் ஒரு தேர்வாக இருக்காது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், இந்த சிக்கலைத் தீர்க்க இரு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்கா தனது வர்த்தக பேச்சுவார்த்தையாளரான பிரண்டன் லிஞ்சை டெல்லிக்கு அனுப்புகிறது. அவர், இந்திய வர்த்தக அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளரான ராஜேஷ் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்புகள் இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக உரையாடலை தொடர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விவாதங்கள் பலனளிக்க வேண்டுமானால், அமெரிக்கா தனது எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்திய அரசாங்கம் மரபணு மாற்றப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தாலும், இந்திய நுகர்வோர் அதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.