ஹார்முஸ் ஜலசந்தியை உளவு பார்க்க வந்த அமெரிக்க ஆளில்லா விமானம் காலி.. ரூ. 2,250 கோடி மதிப்பிலான விமானம் கோவிந்தா.. ஈரானை வெனிசுலான்னு நினைச்சி தொட்டுட்ட டிரம்ப்.. தொட்டவனை ஈரான் விட்டதே இல்லை.. இது டிரெயிலர் தான்ம்மா.. இனிமேல் தான் மெயின் பிக்சர் இருக்குது..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சுமார் 240 மில்லியன் டாலர் மதிப்பிலான ‘MQ-4C Triton’ என்ற அதிநவீன கண்காணிப்பு ட்ரோன் பாரசீக வளைகுடா பகுதியில்…

US flight

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சுமார் 240 மில்லியன் டாலர் மதிப்பிலான ‘MQ-4C Triton’ என்ற அதிநவீன கண்காணிப்பு ட்ரோன் பாரசீக வளைகுடா பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இரண்டு எஃப்-35 போர் விமானங்களின் விலையை விட அதிக மதிப்புடைய இந்த ஆளில்லா விமானம், அமெரிக்க ராணுவத்தின் மிக விலையுயர்ந்த உளவு தளவாடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஏப்ரல் 9 அன்று நிகழ்ந்த இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் வான்வழி உளவு பாதுகாப்பில் இது ஒரு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு பிரிவு ‘Class A’ ரக விபத்தாக வகைப்படுத்தியுள்ளது.

இந்த ட்ரோன் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாக என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘Flightradar24’ தரவுகளின்படி, அந்த ட்ரோன் திடீரென அவசர நிலையை அறிவிக்கும் ‘7700’ குறியீட்டை வெளியிட்டதுடன், ஈரான் எல்லை நோக்கி சிறு திருப்பத்தை மேற்கொண்டு மிக வேகமாக தரையிறங்க தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ரேடார் திரைகளில் இருந்து இது காணாமல் போனது. இது ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக விபத்து நடந்த துல்லியமான இடத்தை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘MQ-4C Triton’ என்பது ஒரு சாதாரண ட்ரோன் அல்ல; இது 50,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 7,400 கடல் மைல் தூரம் வரை பயணித்து கடற்பரப்பை உளவு பார்க்கும் வல்லமை இதற்கு உண்டு.

அமெரிக்க கடற்படையின் குறைந்த உயரத்தில் பறக்கும் ‘P-8A Poseidon’ ரோந்து விமானங்களுக்கு துணையாகவும், அவற்றிற்கு தேவையான உயர்நிலைத் தரவுகளை வழங்குவதற்காகவும் இந்த திரிடன் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன/

இந்தச் சம்பவம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை கண்காணிக்க அமெரிக்கா இதுபோன்ற விலையுயர்ந்த உளவு விமானங்களையே பெரிதும் நம்பியுள்ளது. இந்நிலையில், இவ்வளவு மதிப்புமிக்க ஒரு தற்காப்புத் தளவாடம் மாயமானது அமெரிக்க ராணுவத்திற்கு பொருளாதார ரீதியாகவும், உத்தி ரீதியாகவும் ஒரு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.