இதுக்கு மேல நம்மலால தாக்கு பிடிக்க முடியாது.. என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது போரை நிறுத்திவிட்டு வா.. துணை அதிபரை பாகிஸ்தானுக்கு அனுப்பிய டிரம்ப்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை கண்டறியுமாறு தனது துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்த போர்…

trump vance

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை கண்டறியுமாறு தனது துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்த போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை தணிக்கும் நோக்கில் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு முக்கிய அமைதி பேச்சுவார்த்தைக்காக இன்று பயணம் மேற்கொள்கிறார்.

டிரம்பின் நெருக்கமான வட்டாரங்களில், வெளிநாட்டு இராணுவ தலையீடுகள் மற்றும் முடிவில்லா போர்களில் அமெரிக்க வீரர்களை ஈடுபடுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருபவர் வான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமலில் இருக்கும் தற்காலிக போர்நிறுத்தம் எந்த நேரத்திலும் முறியும் அபாயத்தில் உள்ள சூழலில், வான்ஸின் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஈரானின் பகிரங்கமான கோரிக்கைகளுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளியான இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளதால், இந்த பேச்சுவார்த்தை சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

வான்ஸுடன் இணைந்து டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர். போருக்கு முன்னதாக ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து இவர்கள் ஏற்கனவே மூன்று முறை மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் வடிவம் எப்படி இருக்கும், அதாவது ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படுமா அல்லது மறைமுகமாக நடைபெறுமா என்பது குறித்து வெள்ளை மாளிகை முறையான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

மேலும், இந்த பயணத்தின் மூலம் எட்டப்பட வேண்டிய இலக்குகள் குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வரவும், அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கவும் டிரம்ப் நிர்வாகம் இந்த தூதரக நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது இஸ்லாமாபாத் நோக்கி திரும்பியுள்ளது.