விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கலா? அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் சென்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விண்வெளி…

sunitha williams

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் சென்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பல சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்பேஸ் ஷிப் என்ற நிறுவனம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தது. இந்த பயணத்தில் இந்தியாவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 5-ம் தேதி அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கிய நிலையில் சுனிதா வில்லியம்ஸ் உடன் இன்னொரு வீரரும் பயணம் செய்தனர். ஜூன் 7ஆம் தேதி அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது என்றும் கூறப்பட்டது.

sunitha williams2

இந்த நிலையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரரை பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும் என்றும் ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பூமிக்கு அவர்கள் திரும்பவில்லை என்றும் ஸ்டார் லைனில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவைதான் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கு கால தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் இன்று அதாவது ஜூன் 26 ஆம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும் என்றும் ஆனால் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ஜூலை 2ஆம் தேதிக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இரண்டு விண்வெளி வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என தனியார் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்ப வெறும் 6 மணி நேரங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த நிலையில், அவர் பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த போது தான் அவர் வந்த விண்வெளிக்கலம் வெடித்து சிதறியதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.