ட்விட்டரில் வாழ்த்து அரசியல் செய்யும் விஜய்.. இப்போது யாருக்கு வாழ்த்து தெரியுமா?

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் மறைந்த தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதும், தற்போதைய தலைவர்களில் சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதற்கு மட்டுமே தனது சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார் என்றும் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில் அவர் தவறி வருகிறார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அவர் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தாலும் மற்ற விவகாரங்களில் அவர் தலையிடுவது இல்லை என்றும் பெரும்பாலும் வாழ்த்து தெரிவிப்பது, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது ஆகியவற்றிற்காக தான் அவர் தனது சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தில் குதிக்க விரும்பும் விஜய், பொது மக்களின் பிரச்சினைக்காக ட்விட்டரில் இருந்து மட்டும் குரல் கொடுக்காமல், களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும், மக்கள் பிரச்சனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் அவருக்கு அறிவுரை தெரிவித்து வருகின்றனர்.

vijay rahul1

ஆனால் கட்சி ஆரம்பித்த இத்தனை நாள் ஆகியும் அவர் இன்னும் ஒரு பிரஸ்மீட் கூட நடத்தவில்லை என்றும் தனது கட்சியின் கொள்கை என்ன என்பதை கூட அவர் இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய், ராகுல் காந்திக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து நாட்டிற்காக சேவை செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மொத்தத்தில் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்க மட்டுமே பயன்படுத்தி வருவதை அடுத்து வாழ்த்து சொல்லும் தலைவர் என்ற பெயருடன் அவரை நெட்டிசன்கள் அழைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் அவர் களத்தில் இறங்கி நேரடியாக அரசியல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.