வெள்ளை மாளிகைக்கு தெரியாம ஒரு வித்தை… இது புடினோட புது பிளான்! திடீரென உக்ரைன் உடனான போரை நிறுத்திய புதின்.. இதையும் நான் தான் நிறுத்தினேன்னு சொல்லிடாதீங்க டிரம்ப்..!

உலக அரங்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஒரு சிறு நிம்மதி பெருமூச்சாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்காலிக அமைதி திரும்பியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றி,…

trump putin

உலக அரங்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஒரு சிறு நிம்மதி பெருமூச்சாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்காலிக அமைதி திரும்பியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றி, தற்போது ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்யாவும் போரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்துள்ளது.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபுப்படி ஏப்ரல் 12 அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 32 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ஆயுதங்கள் மௌனமாகும் என ரஷ்ய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் தங்கள் நாடு இந்த அமைதி முயற்சியை பின்பற்றும் என உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும், “எதிர்தரப்பு ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்” என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போர்நிறுத்த முடிவானது அமெரிக்காவுடன் ஆலோசித்து எடுக்கப்பட்டதல்ல என்று ரஷ்யா கூறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நான் தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் கூறிவிடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்..

இருப்பினும் திரைக்கு பின்னால் சுவாரஸ்யமான சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. புடினின் சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரிவ் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டு, டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார். இது அமைதி ஒப்பந்தம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்த ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

மக்களுக்குப் பயமில்லாத ஒரு பண்டிகைக் காலம் தேவை” என்று உருக்கமாக பேசியுள்ள ஜெலென்ஸ்கி, எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை இரு தரப்பும் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலிகமாக சம்மதித்துள்ள ரஷ்யா, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர அமைதியை நோக்கி நகர வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.