பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக் குழு கூட்டத்தில், இந்தியா 1960 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட இந்தஸ் நீர் உடன்படிக்கையை இடைநிறுத்தும் முடிவை அறிவித்த பிறகு இஷாக் தார் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தஸ் நீர் உடன்படிக்கையை இடைநிறுத்தம் குறித்து பேசிய அவர், ‘பாகிஸ்தானில் உள்ள 240 மில்லியன் மக்களுக்கு நீர் தேவைப்படுகிறது. நீரைத் தடுக்க முடியாது. இது ஒரு போர் அறிவிப்பு போலவே அமையும். நீரின் ஓட்டத்தை தடுக்க முயலும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது,”மாறாக நாம் பதிலடி கொடுப்போம்” என்றும் எச்சரித்தார்.
இதேபோல், பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்தியில், “இந்தஸ் நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் உரிய நீரை தடுப்பது அல்லது வேறு திசையில் திருப்புவது இந்தியாவின் போர் அறிவிப்பாகவே கருதப்படும்,” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபின் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது அசிஃபும், “இந்தியாவால் எங்கள் குடிமக்களுக்கு தீங்கு ஏற்பட்டால், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. மாறாக பழிவாங்குவோம். அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என கூறி, பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.