பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?

  பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுவது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை…

pakistan army

 

பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுவது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெஹல்காம் தாக்குதலை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவும் அந்நாட்டின் மீது போர் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவதால் எல்லையில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் வீரர்கள் பாகிஸ்தானுடனான போரை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி திடீரென தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின் படி, தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அவருடைய உறவினர்களின் யாராவது ஒருவர் வீட்டில் ஒளிந்து இருக்கலாம் என்றும், அல்லது கண் காணாத இடத்திற்கு தப்பித்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெஹல்காம் தாக்குதல் நடந்த 2 நாட்களில், அவரது குடும்பம் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாகவும், வேறு ஒரு நாட்டில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவ தலைவர்கள் வீரத்துடன் போரை எதிர்நோக்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைவரே அந்நாட்டிலிருந்து பயந்து தப்பி ஓடிவிட்ட சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.