இனிமேல் யாரும் வருமான வரியே கட்ட வேண்டாம்.. அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் வருமான வரியை நீக்கும் அறிவிக்கப் வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரிக்ள் மூலம் போதுமான நிதி திரட்டக் கூடிய நிலையை அடைந்தால்…

income

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் வருமான வரியை நீக்கும் அறிவிக்கப் வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரிக்ள் மூலம் போதுமான நிதி திரட்டக் கூடிய நிலையை அடைந்தால் அமெரிக்க மக்கள் யாரும் வரி கட்ட வேண்டாம் என்ற அறிவிப்பு சாத்தியமென கூறப்படுகிறது.

1800-களில் அமெரிக்கா, வரிகள் மூலம் பெரிய நிதி பலன்களை பெற்றதை குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், ஏப்ரல் 2ஆம் தேதி உலக நாடுகளுக்கான ஏற்றுமதி வரிகள் குறித்த அறிவிப்பு, நிதி சந்தைகளில் பதட்டத்தை ஏற்படுத்தின. பொருளாதார மந்தம் வரலாம் என அச்சத்தை உருவாக்கியதால், அவர் இந்த இறக்குமதி வரிகளில் 90 நாள் தற்காலிக விலக்கு வழங்கினார். அதே நேரத்தில், சீனாவுக்கு எதிரான ஏற்கனவே கடுமையான வரிகளை 145% வரை உயர்த்தி தற்போது அதை 245% என அதிகரித்துள்ளார்.

“இந்த வரிகளில் கிடைக்கும் வருமானம் மிகப் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அது வருமான வரிக்கு பதிலாக வந்துவிடலாம்,” என டிரம்ப் Fox Noticias-க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் வருமான வரி தொடர்பான எந்தவொரு அறிவிப்புக்கும் காங்கிரஸின் அனுமதி அவசியம் என்பதை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட வரிவிலக்கு திட்டத்தின் பின்னணியில், தற்போது மீண்டும் வருமான வரியை முற்றிலும் நீக்கும் முயற்சிகள் வலுப்பெற்று வருகின்றன. குறைந்தபட்சம் வரியை பெருமளவு குறைக்க வாய்ப்பு உள்ளது.