மோடி எப்படி ரெண்டு நாளில் பாகிஸ்தானை அடிச்சி நொறுக்கி போரை நிறுத்துனாரு.. அதேபோல் ஈரான் போரை நிறுத்திடுங்க.. இதுக்கு மேல போரை நீடித்தால் பொருளாதாரம் சின்னபின்னாமாகிவிடும்.. மக்கள் இப்போதே எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்.. இடைத்தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. சம்பவம் பண்ணியாச்சு… இலக்கை எட்டியாச்சு! இனி அங்கேயே நிக்கிறது புத்திசாலித்தனம் இல்ல, வீண் செலவு! டிரம்புக்கு ஆலோசனை கூறும் ஆதரவாளர்கள்.. ஆனால் டிரம்ப் கேட்பாரா?

ஈரான் உடனான போரில் அமெரிக்கா தனது ராணுவ இலக்குகளை பெரும்பாலும் எட்டிவிட்டதாகவும், எனவே தற்போது இந்த போரிலிருந்து வெளியேறுவதற்கான முறையான உத்தியை வகுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அவரது நெருக்கமான ஆலோசகர்கள்…

trump modi

ஈரான் உடனான போரில் அமெரிக்கா தனது ராணுவ இலக்குகளை பெரும்பாலும் எட்டிவிட்டதாகவும், எனவே தற்போது இந்த போரிலிருந்து வெளியேறுவதற்கான முறையான உத்தியை வகுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அவரது நெருக்கமான ஆலோசகர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போரை ஒரு வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையாக மக்களிடம் முன்வைத்துவிட்டு, நீண்டகால போரினால் ஏற்படும் தேவையற்ற அபாயங்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு ட்ரம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தபோதிலும், போர் நீண்டு கொண்டே செல்வது அந்த ஆதரவை மெல்ல மெல்ல சிதைத்துவிடும் என்று ஆலோசகர்கள் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிபர் ட்ரம்பிற்கு போர் குறித்த சமீபத்திய பொதுக்கருத்துக்கணிப்பு முடிவுகள் விளக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் பெரும்பாலான அமெரிக்க மக்கள் இந்த தேவையற்ற ராணுவ மோதலை எதிர்க்கிறார்கள் என்பதை அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, இந்த போர்ச்சூழல், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் இந்த எதிர்ப்பானது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒருவித அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் போரை தொடர்வதா அல்லது கௌரவமான முறையில் முடிவுக்கு கொண்டு வருவதா என்ற விவாதம் வெள்ளை மாளிகைக்குள் சூடுபிடித்துள்ளது.

பொருளாதார ரீதியான பாதிப்புகளும் இந்த உள்நாட்டு விவாதங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டி உயர்ந்துள்ளது ட்ரம்ப்பின் ஆலோசகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதால், அது சாமானிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். பொருளாதார நிலைத்தன்மை என்பது ஒரு நாட்டின் வெற்றிக்கு முக்கியமானது என்பதால், போரினால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்த போர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நீடிக்கும் பட்சத்தில், அது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். தேர்தலை மையமாக கொண்ட அரசியல் நகர்வுகளும், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

அமெரிக்காவின் ராணுவ பலம் ஏற்கனவே ஈரானின் முக்கிய கட்டமைப்புகளை சிதைத்துள்ள நிலையில், இதற்கு மேல் போரை தொடர்வது கூடுதல் செலவையும் உயிர்ச்சேதத்தையும் மட்டுமே தரும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. “வெற்றிகரமான நடவடிக்கை” என்ற முத்திரையுடன் வெளியேறுவது ட்ரம்பின் பிம்பத்தை உலக அளவில் ஒரு வலிமையான தலைவராக நிலைநிறுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர். அதே சமயம், ஈரானின் பதிலடி தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை சமாளிக்க ஒரு தெளிவான வெளியேற்ற திட்டம் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஒரு இக்கட்டான ராஜதந்திர சூழலில் உள்ளார். ஒருபுறம் போரை தீவிரப்படுத்தும் தனது முந்தைய எச்சரிக்கைகள், மறுபுறம் ஆலோசகர்களின் வெளியேற்ற அறிவுரைகள் என அவர் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 2026 இடைத்தேர்தல், பொருளாதார சிக்கல்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு ஆகிய மூன்றையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை எப்படி மாற்றியமைக்க போகிறது என்பது வரும் வாரங்களில் தெரியவரும். இந்த வெளியேற்ற உத்தி உலக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பாகிஸ்தானின் தீவிரவாத மையங்களை தகர்த்தவுடன் இந்தியா எப்படி ஆபரேஷன் சிந்தூர் போரை புத்திசாலித்தனமாக இரண்டே நாளில் நிறுத்திவிட்டதோ, அதேபோல் அமெரிக்காவும் செயல்பட வேண்டும் என டிரம்புக்கு அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.