பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து நதி உலகின் மிகப்பழமையான நதியாகும். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மிக நீண்ட நதியாக உள்ளது. சிந்து நதிக்கரையில் தோன்றிய நாகரீகம் தான் உலகத்திற்கே இந்தியாவின் பெருமையை பறைசாற்றி…

Jackpot for Pakistan: Gold worth several thousand crores found in Indus River

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து நதி உலகின் மிகப்பழமையான நதியாகும். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மிக நீண்ட நதியாக உள்ளது. சிந்து நதிக்கரையில் தோன்றிய நாகரீகம் தான் உலகத்திற்கே இந்தியாவின் பெருமையை பறைசாற்றி வருகிறது. இந்நிலையில் சிந்து நதியில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதுது. அதனை தோண்டி எடுக்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டினார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.

உலகில் தோன்றிய மூத்த நாகரிகங்களுள் ஒன்று என்ற பெருமை கொண்டது சிந்து சமவெளி நாகரீகம்.அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சிந்து நதியில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் புதைந்து இருக்க சாத்தியம் இருக்கிறதாம். அதாவது, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அட்டோ பகுதியில் உள்ள சிந்து ஆற்றினுள் 32.6 டன் தங்க படிமங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

இதுபற்றி அந்த நாட்டு புவியியல் நிபுணர்கள் கூறுகையில், பாகிஸ்தானின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து இந்த தங்க படிமங்கள் வந்து இருக்கலாம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் தட்டுகள் மோதி மலை உருவானபோது ஏற்பட்ட அரிப்பால் இந்த தங்க படிமங்கள் சிந்து நதிக்கு அடித்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

சிந்து நதியில் இருப்பதாக கூறப்படும் தங்கத்தின் மதிப்பு, அந்த நாட்டின் மதிப்பில் ரூ.60 ஆயிரம் கோடி இருக்கும் என்று அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே நேரம் பாகிஸ்தான் கனிமவளத்துறை இதுபற்றி எந்தவிதமான கருத்தும் கூறவில்லை.. இந்த தகவல்கள் தற்போது பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் பலர், ஆற்றுக்குள் புதைந்து இருக்கும் தங்கத்தை தோண்டி எடுக்க, சிந்து நதிக்கரையில் திரண்டார்கள். இதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பாகிஸ்தான் அமல்படுத்தியுள்ளது. யாரும் தங்கத்துக்காக ஆற்றுக்குள் இறங்காதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.