1973 ஆம் ஆண்டு இண்டியானா மாகாணம் லஃபாயட் நகரத்தில் பிறந்த மோகன், தனது சிறுவயதை அமெரிக்காவில் கழித்தார். 1985 ஆம் ஆண்டு, சிறிது காலத்திற்கு இந்தியா திரும்பிய அவர், பின்னர் 1992 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்கா திரும்பி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின்சார பொறியியலில் பட்டம் பெற்றார்.
1996 ஆம் ஆண்டு அக்சென்சர் நிறுவனத்தில் தனது தொழில் முறையை தொடங்கிய அவர், பின்னர் NetGravity நிறுவனத்தில் பணியாற்றினார். இது DoubleClick ஆல் கைப்பற்றப்பட்டதால், அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. 2007 ஆம் ஆண்டு, கூகுள் DoubleClick-ஐ வாங்கியபோது, மோகன் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
யூடியூப் டிவி, ஏஐ அடிப்படையிலான பரிந்துரைகள் போன்ற துறைகளில் பல விஷயங்களை இவர் தான் அறிமுகம் செய்தார். டிக் டாக் போன்ற போட்டியாளர்களை எதிர்கொண்டு யூட்யூப் வளர்ச்சியை உறுதி செய்தார்.
மோகன் இப்போது யூடியூபில் எதிர்கால வளர்ச்சிக்கு வலுச்சேர்க்க பணியாற்றி வருகிறார். ஒரு இன்டர்னாக ஆரம்பித்த பயணம், இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தலைமைப் பதவியில் அவரை கொண்டுவந்துள்ளது.
அவரது வாழ்க்கை, திறமை, நேரம் மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறன் மிகப்பெரிய சாதனையை உருவாக்கும் என்பதற்கான சான்றாக விளங்குகிறது.