ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பகிரங்க ஆதரவு.. இந்தியா, ஆப்கானிஸ்தான், பலூச் என சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. அமெரிக்க உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.. இனி தப்பிக்க வழியே இல்லை.. பாகிஸ்தான் கதை முடிய போகிறதா?

அண்மைக் காலமாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்திற்கும் இடையே எல்லையில் மோதல்களும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், இந்த பிராந்திய சூழல் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா தொடர்ந்து…

pak

அண்மைக் காலமாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்திற்கும் இடையே எல்லையில் மோதல்களும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், இந்த பிராந்திய சூழல் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து மூன்று முக்கிய அம்சங்களை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மோதல்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறி, இந்த பிரச்சினை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாக தெரிவித்தார்.

“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என்பது தெளிவாக தெரியும். தன்னுடைய சொந்த உள்நாட்டு தோல்விகளுக்காக அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் நீண்டகால நடைமுறை மற்றும் பழைய பழக்கம் ஆகும்.

ஆப்கானிஸ்தான் அதன் சொந்த பிரதேசங்கள் மீது இறையாண்மையை கையாள்வதில் பாகிஸ்தான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இதன் மூலம், எல்லை மோதல்களுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அரசியலும், ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மதிக்காத போக்கும் தான் அடிப்படை காரணம் என்று இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மோதல் சூழலுக்கு மத்தியில், இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான் நிர்வாகம் இந்தியாவுக்கு ஆதரவாக ‘நிழல் போரில்’ ஈடுபடுவதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த வகையான குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் “பழைய கதை” என்றும் இந்தியா சாடியுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான உறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா தனது இராஜதந்திரப் பணிகளின் நிலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2022 ஜூன் மாதம் முதல் காபூலில் இந்தியாவின் ‘தொழில்நுட்ப தூதுக்குழு செயல்பட்டு வருகிறது.இந்த தொழில்நுட்ப தூதுக்குழுவை முழு அளவிலான தூதரகமாக அடுத்த சில நாட்களில் நிலை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், தலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தகி இந்தியாவுக்கு வருகை தந்து, வெளியுறவு அமைச்சருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். மனிதாபிமான உதவிகள், சுகாதார துறையில் ஒத்துழைப்பு வளர்ச்சி பணிகள் மற்றும் தூதரகத்தின் நிலை உயர்வு ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.

இந்தியா, தலிபான் நிர்வாகத்திற்கு இதுவரை முறையான அங்கீகாரம் வழங்கவில்லை என்றாலும், இந்த புதிய அறிவிப்பு, தற்போதைய கள யதார்த்தங்களின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளதை காட்டுகிறது. இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் உறுதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.