வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல், அங்குள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்தியாவின் சர்வதேச அரசியல் வளர்ச்சிக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சிகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தற்போது நடப்பது ஒரு ‘காட்டாட்சி’ என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு சட்டம்-ஒழுங்கு என்பது முழுமையாக சீர்குலைந்துவிட்டது. ஒரு நாடு அழிவை நோக்கி செல்லும்போது இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள் நடப்பது இயல்புதான். சமீபத்தில் தீபு சந்திரா என்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அங்கிருக்கும் மனிதாபிமானமற்ற சூழலை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. காசா விவகாரத்திற்காக இங்கு ஊர்வலம் போன பல ‘அறிவுஜீவிகள்’, அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைக் கண்டு மௌனம் காப்பது ஏனோ புரியவில்லை. இது அவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
வங்கதேசம் என்பது தற்போது ஒரு மூழ்கும் கப்பல் போன்றது. இந்தியா உருவாக்கிய, இந்தியா பல்வேறு உதவிகளை செய்த ஒரு நாடு இன்று அந்த நன்றியை மறந்து செயல்படுவது வருத்தத்திற்குரியது. குறிப்பாக, முந்தைய பிரதமர் ஆட்சியின் போது ஓரளவு சீராக இருந்த அந்த நாடு, தற்போது ‘டீப் ஸ்டேட்’ எனப்படும் சர்வதேச நிழல் சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது. மைக்ரோ பைனான்சிங் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதாக கூறப்படும் யூனுஸ் போன்றவர்கள் உண்மையில் ஒரு ‘கந்துவட்டி’ முறைமையையே கையாண்டனர் என்பது தற்போது வெளிப்பட்டுவிட்டது. இந்தியாவை பகைத்துக்கொண்டு அமெரிக்கா மற்றும் சீனாவை நம்பி செயல்படும் அவர்களின் போக்கு, இறுதியில் அந்த நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்போவது உறுதி.
இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு அண்டை நாடுகள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சில சக்திகளும் அஞ்சுகின்றன. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை ஏற்றுமதி பல ஆயிரம் கோடிகளை தொட்டுள்ளது. அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடம் பெரும் விலை கொடுத்து ஆயுதம் வாங்க முடியாத நாடுகள், தற்போது தரமான மற்றும் மலிவான இந்திய தயாரிப்புகளை உதாரணமாக பிரமோஸ் ஏவுகணைகள் போன்ற ஆயுங்களை வாங்க இந்தியாவை நாடுகின்றன. அதேபோல் இந்தியாவின் ‘யூபிஐ’ மற்றும் ‘ரூபே’ கார்டுகளின் வளர்ச்சி விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஏகபோக உரிமையை உடைத்துள்ளது. இந்த பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியை முடக்கவே இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் இத்தகைய குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றன.
வங்கதேசத்தில் நிலவும் இந்த மதவெறி வன்முறை மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கருத்தில் கொண்டே மத்திய அரசு ‘சிஏஏ’ சட்டத்தை கொண்டு வந்தது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர்) குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கம். ஆனால், இங்குள்ள சிலர் இது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் செய்தனர். தற்போது வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகள், அந்த சட்டத்தின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தியிருக்கும்.
வங்கதேசத்தின் தற்காலிக ஆட்சியாளர்கள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிப்போம் என்று சவால் விடுவது வெறும் உதார் மட்டுமே. தன் நாட்டு மக்களுக்கே சோறு போட வழியில்லாத பிச்சைக்கார நாடுகள், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுவது வேடிக்கையானது. இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிற்கு சாலை வழியாக வழங்கி வந்த போக்குவரத்து வசதிகளை குறைத்து, செக் வைக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில காலத்திற்கு இதே நிலை நீடித்தால், அவர்கள் பிச்சை பாத்திரத்துடன் இந்தியாவின் காலடியில் வந்து விழுவதை தவிர வேறு வழியில்லை.
மொத்தத்தில், வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகள் ஒரு திட்டமிட்ட ‘ட்ராப்’. இந்தியாவை தூண்டிவிட்டு ஏதோ ஒரு வகையில் சிக்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால், இந்தியா நிதானமாகவே காய்களை நகர்த்தி வருகிறது. அங்குள்ள அமைதியின்மை இந்தியாவுக்கு ஊடுருவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, இந்தியா தனது பொருளாதார மற்றும் பாதுகாப்பு பாதையில் தொடர்ந்து முன்னேறும் என்பதில் ஐயமில்லை
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
