தங்க நகையை பொது இடத்தில் வைத்து விட்டு அரைமணி நேரம் காத்திருந்த பெண்.. அடுத்து நடந்த அற்புதம்.. வீடியோ

யாராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவத்தை கொண்டு நிறைய பணம் சம்பாதித்து வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். இதற்காக நாம் பல…

Dubai Safest Country

யாராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவத்தை கொண்டு நிறைய பணம் சம்பாதித்து வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். இதற்காக நாம் பல வழிகளை தேடி பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளை பார்த்தாலும் எளிதாக அது கிடைத்து விடாதா என்ற எண்ணமே நமக்கு தோன்றும்.

இதற்கு மத்தியில் திடீரென ஏதாவது ஒரு பொது இடத்தில் யார் கையிலும் சிக்காமல் விலை மதிப்புள்ள பொருட்கள் கிடைத்தால் ஒரு சிலர் அதை உரிய நபர்களிடம் ஒப்படைக்க நினைப்பார்கள். இன்னொரு பக்கம் அதன் மூலம் தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு நல்ல ஒரு வாழ்க்கையை வழிநடத்தவும் மேற்படுவார்கள். அப்படி ஒரு சூழலில் தான் பெண் ஒருவர் சுமார் அரை மணி நேரமாக தனது தங்க நகையை ஒரு பொது இடத்தில் வைக்க அதன் பின்னர் நடந்த சம்பவம் தான் தற்போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பாதுகாப்பான ஊரு போல..

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் LeylaAfshonkar என்ற பெண் ஒருவர் துபாய் நகரம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை பரிசோதிப்பதற்காக பிராங்க் வீடியோ ஒன்றை ஷூட் செய்கிறார். அப்போது அங்கே நிற்கும் நீல நிற பிஎம்டபுள்யூ கார் ஒன்றில் தனது தங்க நகை மற்றும் கம்மல் ஆகிய இரண்டையும் வைத்துவிட்டு அருகில் இருக்கும் கடைக்குள் அந்த பெண் சென்று விடுகிறார்.

அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க, அவர்கள் யாராவது அதை எடுப்பார்களா இல்லை அப்படியே விட்டு விடுவார்களா என்பதையும் அந்த பெண் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டும் இருக்கிறார். ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண் அதனை பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு மிக வியப்பான ஒரு விடை தான் இறுதியில் கிடைத்திருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் ஏராளமான மக்கள் அந்த பகுதியில் நடந்து சென்றாலும் ஒருவர் கூட அந்த தங்கத்தை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பது அந்த பெண்ணை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மெய்சிலிர்த்த பெண்

நடுவே பெண் ஒருவர் கீழே விழுந்த கம்மலை எடுத்தாலும் மீண்டும் காரின் மீது வைத்து விட்டுச் சென்று விடுகிறார். இதுவும் அந்த பிரபலத்தை ஒரு விதத்தில் மெய்சிலிர்க்க வைக்க அரை மணி நேரத்தில் ஒருவர் கூட நகையை எடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் துபாய் தான் உலகத்திலேயே பாதுகாப்பான இடம் என்றும் வியப்புடன் அந்த பெண் குறிப்பிடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் துபாய் குறித்தும் அதே நேரத்தில் இந்தியாவில் இப்படி இருந்திருந்தால் அந்த காரையே சேர்த்து தூக்கி கொண்டு போயிருப்பார்கள் என்றும் வேடிக்கையாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.