சமூக நெறிகளை மீறிய உறவுகள் பெரும்பாலும் சோகத்திலும், வன்முறையிலும் முடிவடைகின்றன என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் தற்போது மாமனார் – மருமகள் உறவிலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 62 வயது மார்க் கிப்பனுக்கும், அவரது 33 வயது மருமகள் ஜாஸ்மின் வைல்டுக்கும் இடையிலான கள்ள உறவு, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது.
மார்க் கிப்பன், தனது மகன் அலெக்ஸ் கிப்பனின் மனைவி ஜாஸ்மினுடன் ரகசிய உறவில் இருந்தார். இருவரும் தங்கள் துணையை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த உறவு, குடும்பத்தினரிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, அலெக்ஸ் தனது தந்தையிடமிருந்து விலகியே இருந்தார். இந்த சூழலில், கடந்த ஆண்டு அலெக்ஸ் தனது தந்தையை காரால் மோத முயன்றதாகவும், அதற்காக சிறை சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மார்க் மற்றும் ஜாஸ்மின் இருவரும் விடுமுறைக்கு சென்றனர். அங்கு நீச்சல் குளத்தில் வைத்து, மார்க்கின் உயில் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மார்க்கின் உயிலில் தனது பெயர் இடம்பெறாததால் ஜாஸ்மின் கோபமடைந்தார். இந்த சண்டை முற்றியபோது, மார்க் ஜாஸ்மினின் தலையை நீரில் பலமுறை அமுக்கியுள்ளார். ஜாஸ்மின் மூச்சுத்திணறி தப்பிக்க முயன்றபோது, அவரது 9 வயது மகள் தடுக்க வந்தார். ஆனால், மார்க் அவளையும் தள்ளிவிட்டார்.
ஜாஸ்மின் உதவி கோரி சத்தமிட்டபோது, அங்கிருந்த பெண்கள் உதவிக்கு வந்து காவல்துறையை தொடர்பு கொண்டனர். அவர்களின் தலையீட்டால்தான் ஜாஸ்மின் உயிர் பிழைத்தார். உடனடியாக கைது செய்யப்பட்ட மார்க் கிப்பன் மீது, கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாமனார் ஜெயிலிலும், அவரது மகனும் ஜெயிலிலும், மாமனாரின் முன்னாள் மனைவி மற்றும் மகனின் முன்னாள் மனைவியும் ஆதரவின்றி உள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
