கான்பெரா: சாலமன் தீவுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடியை ஆஸ்திரேலியா வழங்குகிறது. அண்மையில் சாலமன் தீவு பிரதமர் ஜெரேமியா மானேலை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். அப்போது சாலமன் தீவுகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசாரை உருவாக்க சுமார் ரூ.1,000 கோடி வழங்குவதாக அல்பானீஸ் அறிவித்தார்.
சாலமன் தீவுகள் மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ ஆகும். இதன் தலைநகர் ஓனியாரா குவாடல்கனால் தீவில் இருக்கிறது. சாலமன் தீவுகளில் , தற்போதைய மக்கள்தொகை 2023 இல் 800,005 ஆக உள்ளது , 2050 இல் 64 % அதிகரித்து 1,309,110 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டித்தீவு நாடு சாலமன் தீவுகள். 2022-ம் ஆண்டு சாலமன் தீவுகளுக்கும், சீனாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் சீனா தனது ராணுவ தளத்தை அங்கு அமைக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில் சாலமன் தீவு பிரதமர் ஜெரேமியா மானேலை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். அப்போது சாலமன் தீவுகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசாரை உருவாக்க சுமார் ரூ.1,000 கோடி வழங்குவதாக அல்பானீஸ் அறிவித்தார். பின்னர் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `இந்த நிதியுதவி மூலம் சாலமன் தீவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் இனிவரும் காலங்களில் நாட்டின் பாதுகாப்புக்காக வெளிப்புற கூட்டாளிகளை நம்பியிருப்பது குறையும்’ என கூறப்பட்டுள்ளது.