அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா.. இருந்த ஒரே நண்பனும் போயே போச்சு.. சீனாவின் புத்திசாலித்தனமான நகர்வு.. பிரிக்ஸ்-ஐ நோக்கி வரும் ஆஸ்திரேலியா.. இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை இழக்கும் அமெரிக்கா.. இனி என்ன நடக்கும்?

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வர்த்தக தடைகள், பாதுகாப்பு செலவினங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் தைவான் மீதான அமெரிக்காவின்…

australia

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வர்த்தக தடைகள், பாதுகாப்பு செலவினங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் தைவான் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிகவும் நம்பகமான நட்பு நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா, சீனாவை நோக்கியும், பிரிக்ஸ் கூட்டணி நோக்கியும் சாய்ந்து வருகிறதா? என்ற சந்தேகம் உலக அரங்கில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கின் முன்னணி தளமாக விளங்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்க டாலருக்கு பதிலாக சீனாவின் யூவான் நாணயத்தை ஏற்றுக்கொண்டு வர்த்தகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய வர்த்தக கரன்சியாக விளங்கும் அமெரிக்க டாலர் தனது ஆதிக்கத்தை இழக்குமா என்பது குறித்து சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஏற்கனவே இதுகுறித்து காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெய் இந்திய ரூபாயில் தான் வர்த்தகம் நடக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை முன்வைக்க ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா, சீனாவின் யூவான் நாணயத்துடன் தனது வர்த்தக ஈடுபாட்டை அதிகரிப்பது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அமெரிக்க டாலரை ஆஸ்திரேலியா தவிர்த்தால் அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

ஆஸ்திரேலியாவின் இந்த யூவான் வர்த்தக முடிவு என்பது சாதாரணமாக எடுத்த முடிவாக இருக்காது. உலக நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வர்த்தகப் போர்கள், மாறிவரும் கூட்டணிகள் மற்றும் பிரிக்ஸ் அணியின் எழுச்சி ஆகியவைகளாக இருக்கலாம்.

பாரம்பரியமாக அமெரிக்காவை சார்ந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, எஃகு மற்றும் அலுமினியம் போன்ற முக்கிய ஆஸ்திரேலிய ஏற்றுமதிகளுக்கு சுங்க வரிகளை விதித்தபோது, அங்குள்ள தொழில்துறைகள் பெரும் பொருளாதார வலியை சந்தித்தன. அதே நேரத்தில், சீனா இரும்புத்தாது மற்றும் விவசாய பொருட்களின் கொள்முதலை அதிகரிப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் பொருளாதார உதவிக்கரம் வழங்கியது.

யார் அதிக நம்பகத்தன்மையை வழங்குகிறார்? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய தலைவர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் இந்த தடுமாற்றத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட சீனா, மிக துல்லியமான வியூகத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. இன்றைய சந்திப்பில் சீன அதிகாரிகள் சலுகை வர்த்தக ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் நீண்ட கால செழிப்பிற்கு உறுதியளிக்கும் கூட்டாண்மைகளை முன்மொழிந்தால் ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக சீனா பக்கம் சாய்ந்துவிட வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா பிரிக்ஸ் கூட்டணியை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள், உளவுத்துறை மையங்கள் மற்றும் தளவாட மையங்களுக்கு ஆஸ்திரேலியா இடமளித்துள்ளது. இவை அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகத்திற்கு அத்தியாவசியமானவை. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை இழந்தால் இந்த பிராந்தியத்தில் சீனா உள்ளே நுழைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மொத்தத்தில் ஆஸ்திரேலியா – சீனா பேச்சுவார்த்தை உலக நாடுகள் மத்தியில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.