இன்னொரு போர் ஆரம்பம்.. ஆப்கன் – பாகிஸ்தான் பயங்கர மோதல்.. பறிபோனது 6 பாகிஸ்தான் நகரங்கள்.. இந்தியாவில் இருந்து எச்சரித்த ஆப்கன் அமைச்சர்.. இந்தியாவின் நிலை என்ன? பாகிஸ்தான் நாட்டிற்கே ஆபத்தா?

எதிர்பாராதவிதமாக, இந்தியாவுக்கு அருகே மத்திய ஆசியாவில் ஒரு பெரிய போர் வெடித்துள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானை தூண்டிவிட, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. இரு…

afghan pak

எதிர்பாராதவிதமாக, இந்தியாவுக்கு அருகே மத்திய ஆசியாவில் ஒரு பெரிய போர் வெடித்துள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானை தூண்டிவிட, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் பதிலடி தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள் மற்றும் ராணுவ நிலைகளை ஆக்கிரமித்தல் என போர் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாமாகாணத்தில் தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் பிரம்மாண்டமான வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், ‘தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ எனப்படும் பாகிஸ்தான் தலிபான்களின் மறைவிடங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் கூறியது.

பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் காபூல், ஜலாலாபாத், மற்றும் பக்டிகா உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டுகளை வீசியதாகவும், ஆனால் அதில் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்ததாகவும் படங்கள் காட்டுகின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்திய மண்ணில் இருந்தே “பாகிஸ்தான் எங்களை தூண்டக்கூடாது” என்று எச்சரித்தார். அதை தொடர்ந்து, தலிபானின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுன்ஸாதா ஒரு வானொலி செய்தியை வெளியிட்டார். அதில், “தேசத்தை பாதுகாப்பதே நமது கடமை. ஆப்கானிஸ்தானை பாதுகாக்க தயாராக இருங்கள்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, 2,600 கி.மீ. நீளமுள்ள துருன் எல்லை கோடு முழுவதும் கடுமையான சண்டை வெடித்தது. நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் அமெரிக்க படைகள் விட்டு சென்ற நவீன ஆயுதங்களுடன் எல்லையை நோக்கி நகர்ந்தனர்.

இந்த சண்டையில் 12-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆறு பாகிஸ்தான் எல்லை நிலைகளை தலிபான்கள் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஜார், குராம், தார் மற்றும் சித்ரால் போன்ற பகுதிகளிலும் மோதல்கள் நடந்துள்ளன.

இந்த மோதல் குறித்து இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால பயணமாக இந்தியாவில் இருப்பதால், புது டெல்லி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

பாகிஸ்தானுடன் சமீபத்தில் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட சவுதி அரேபியா கூட, “இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்” என்று மத்தியஸ்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. கத்தார் மற்றும் ஈரானும் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் இந்தியாவுடனான பகைமைக்கு மத்தியில், பாகிஸ்தான் தலிபானை தூண்டிவிட்டு தனக்கு மற்றொரு போர் முனையை திறந்துவிட்டுள்ளது.

பல மில்லியன் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் அகதிகளை கட்டாயப்படுத்தி மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையும் தலிபானின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

2021-ல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபானின் முதல் நேரடிப் போர் இதுவாகும். இந்த மோதல் தொடர்ந்தால், பாகிஸ்தான் உள்நாட்டில் பலூச் கிளர்ச்சியாளர்கள், TTP மற்றும் தலிபான் என பல முனைகளில் போரிட வேண்டியிருக்கும். இதன் விளைவு அந்நாட்டிற்கே பேரழிவை ஏற்படுத்தலாம்.