பாகிஸ்தானியர்கள் அமெரிக்க செல்ல தடையா? டிரம்ப் ஆலோசனை செய்வதாக தகவல்..!

  அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, இந்தியா உட்பட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து…

trump pak

 

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, இந்தியா உட்பட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், அடுத்ததாக புதிய பயணத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, 2017 முதல் 2021 வரை டிரம்ப் அதிபராக பதவி வகித்தபோது, ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்ற நிலை உருவானது. ஆனால் ஜோ பைடன் ஆட்சியில் இந்த தடை ரத்து செய்யப்பட்டது.

தற்போது, மீண்டும் டிரம்ப் பதவிக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்பட சில நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கு கடும் கண்டனங்கள் எழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.