அமெரிக்காவில் இருந்து அசிம் முனீர் பேசிய ஆணவப்பேச்சு.. அமெரிக்கா கூறிய மழுப்பலான பதில்.. இதுதான் வல்லரசின் லட்சணமா? பாகிஸ்தானுக்கு ஒரு பாயாசம் போட்ற வேண்டியது தான்..!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்க மண்ணில் அணு ஆயுத போர் குறித்து தெரிவித்த அச்சுறுத்தலான கருத்துகள், சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு அளித்துள்ள மென்மையான…

trump asim

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்க மண்ணில் அணு ஆயுத போர் குறித்து தெரிவித்த அச்சுறுத்தலான கருத்துகள், சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு அளித்துள்ள மென்மையான பதில், இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் அசிம் முனீரின் அச்சுறுத்தல்

கடந்த வாரம், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அசிம் முனீர், “இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோல்வியடையும் சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் அணு ஆயுத நாடாக இருப்பதால், வீழ்ச்சியடைவதற்கு முன்பாக உலகின் பாதியை அழிப்போம்” என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இது, ஒரு நாடு மற்றொரு நாட்டில் இருந்து கொண்டு இத்தகைய அணு ஆயுத அச்சுறுத்தலை விடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இது தவிர, சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், ஏவுகணைகளை பயன்படுத்தி அதை அழிப்போம் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இந்த பொறுப்பற்ற பேச்சு, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாத குழுக்களின் கைகளுக்கு சென்றுவிடுமோ என்ற உலக நாடுகளின் அச்சத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கடும் கண்டனம்

அசிம் முனீரின் இந்த பேச்சுக்கு இந்தியா ஆகஸ்ட் 11 அன்று கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அணு ஆயுத மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானின் வழக்கமான தந்திரம்” என்றும், “இத்தகைய கருத்துகளில் உள்ள பொறுப்பற்ற தன்மையை சர்வதேச சமூகம் தானே முடிவு செய்து கொள்ளும்” என்றும் குறிப்பிட்டது. மேலும், ஒரு நட்பு நாட்டின் மண்ணிலிருந்து இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டது வருத்தத்திற்குரியது என்று இந்தியா சுட்டிக்காட்டியது.

“அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் பணியாது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா தொடர்ந்து எடுக்கும்” என்றும் அந்த அறிக்கையில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மென்மையான பதில்: இந்தியாவின் கவலை

அசிம் முனீரின் இந்த பேச்சு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “இந்த செய்திகளை நாங்கள் அறிவோம். அசிம் முனீரின் இந்த கருத்துகள் குறித்து பாகிஸ்தான் அரசிடமே கேட்டு தெரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல், நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்து, பாகிஸ்தான் அரசை நோக்கி கைகாட்டியிருப்பது இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகையில் உபசரித்த நிலையில், தற்போது இந்த அச்சுறுத்தல் பேச்சுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க மறுப்பது, இருதரப்பு உறவுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.