பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை பதற்றங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை சீர்செய்வது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆப்கானிய அதிகாரியை சந்தித்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான்…

india pakistan army

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை பதற்றங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை சீர்செய்வது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆப்கானிய அதிகாரியை சந்தித்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குண்டுவீச்சில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் படைகள் கோஸ்ட் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார். கோஸ்ட்டின் குர்புஸ் மாவட்டத்தில் உள்ள முகல் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இரவில் குண்டுவீசியதில், ஒரு வீடு அழிக்கப்பட்டது.

இந்தக் குண்டுவீச்சில் 9 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், நான்கு பொதுமக்கள் காயமடைந்தனர் என்றும் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் படைகள் குனார் மற்றும் பக்திகா ஆகிய மாகாணங்களிலும் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் மேலும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் முஜாஹித் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், ஜலால்பாத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தரப்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் சந்தித்து பேசியிருந்தனர். சில மாதங்களுக்கு பிறகு நடந்த முதல் உயர்நிலை சந்திப்பு இதுவாகும்.

பாகிஸ்தானின் ஜலால்பாத் கவுன்சில் ஜெனரல் ஷஃப்கத் கான் மற்றும் தாலிபானால் நியமிக்கப்பட்ட மூத்த தலைவரும், தாலிபான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த் ஜாடாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான நங்கர்ஹார் ஆளுநர் முல்லா முஹம்மது நயீம் அகண்ட் ஆகியோரிடையே இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க ஏற்கனவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அகண்ட் ஜாடா, பாகிஸ்தான் தூதரிடம் தெரிவித்ததாத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருதரப்பு உறவுகளை மீண்டும் சீரமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு அரங்கேற்ற ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாத குழுக்கள் பயன்படுத்துகின்றன என்று பாகிஸ்தான் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கான் தாலிபான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சியும், உயர்நிலை சந்திப்பும் நடந்த உடனேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.