இந்தியா மாதிரி போனா போகுது, பொழச்சிட்டு போன்னு விட்ருவோம்ன்னு பார்த்தியா? எங்க மக்கள் மேலயா குண்டு போட்ற? பாகிஸ்தானை இறங்கி அடிக்கும் ஆப்கானிஸ்தான்.. இதற்கிடையில் பாகிஸ்தான் உள்நாட்டில் ஏற்பட்ட கலவரம்.. நாட்டை விட்டு ஓடப்போகிறார்களா ஆட்சியாளர்கள்?

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், குறிப்பாக ஸ்பின் போல்டாக் (Spin Boldak) மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டும் கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக ஆப்கானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பின்…

war

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், குறிப்பாக ஸ்பின் போல்டாக் (Spin Boldak) மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டும் கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக ஆப்கானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பின் போல்டாக் மாவட்ட தகவல் துறை தலைவர் அலி முகமது ஹக்மல் தெரிவித்த தகவலின்படி, இந்த மோதல்களில் இலகு ரக மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் எறிகணை தாக்குதலால் பொதுமக்கள் வசிக்கும் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் ஆயுத படைகள், பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடக்கும் பகுதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தாக்குதல் நடக்கும் பகுதிக்கு சென்று நிலைமையை சீராய்வு செய்ய அதிகாரிகளுக்கு முடியாத அளவுக்கு தாக்குதல் தீவிரமாக இருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதிகளில் இருந்து தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டி, பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையோர பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது வழக்கம்.

தற்போதைய தாக்குதலும், TTP தலைவர்களை குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் படைகள் உரிய பதிலடி கொடுத்து வருகின்றன.

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பங்கள் உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் இராணுவம் பிளவுபடுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத் தலைமை மற்றும் அதன் தலைமை தளபதி, தங்களது இமேஜை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஆப்கானிஸ்தானை தாக்கி கவனத்தை திசை பாகிஸ்தான் முயல்வதாகவும் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த போது பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதால் இந்தியா போனால் போகிறது என்று தாக்குதலை நிறுத்தியது. ஆனால் ஆப்கானிஸ்தான் தன் நாட்டு மக்கள் மீது குண்டு போட்ட பாகிஸ்தானை சும்மா விடமாட்டோம் என இறங்கி அடிப்பது இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.