இந்தியாவில் தொழிற்சாலைகள், தொழிலாளர் நலன்கள், பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டு 1948-ல் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், வார விடுமுறை, பணிக்கொடை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கம்யூனிஸ நாடான சீனாவில் தொழிலாளர் நலச்சட்டத்தினை மீறி பெயிண்டர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பணியால் அவருக்கு நியூமோமாக்கல் எனப்படும் நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
ரஷ்யாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் நலச்சட்டங்கள் இயற்றப்பட்டன. தற்போது அனைத்து நாடுகளும் இதனையே பின்பற்றி வரும் வேளையில் சீன நாட்டைச் சேர்ந்த பெயிண்டரான அபௌ ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் அதிக வேலைப் பளு காரணமாக வார விடுப்பு கூட இவருக்குக் கொடுக்கப்படவில்லை. மேலும் இவர் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாது பணியாற்றி இருக்கிறார். இடையில் ஒரே ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்திருக்கிறார்.
இதனால் மனச் சோர்வுக்கு ஆளான பெயிண்டர் அபௌவுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு நியூமோமாக்கல் எனப்படும் நிமோனியா வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
6 அடிக்கு ஐ போன்.. அதுவும் வொர்க் ஆகுற கண்டிஷன்ல.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர்..
அவரது உயிரிழப்புக் காரணம் பணிச்சுமைதான் என்று குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் விடுப்பு வழங்காமல் பணிபுரிய வைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டது. இதனால் அபௌ மரணத்திற்கு இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு தொழிலாளர் நலச் சட்டப்படி ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
என்னதான் பணம் வாழ்க்கைக்கு முக்கியம் என்றாலும் வார ஓய்வு என்பது கட்டாயத் தேவை. இந்த ஓய்வு தான் அடுத்து வரும் நாட்களில் பணிபுரிவதற்கு சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் வைத்திருக்கும். இல்லையேல் மனச் சோர்வுக்கு ஆளாகி புதுப் புது வியாதிகள் நம்மைத் தேடி வரும்.