தூக்கத்துல நடக்குற வியாதியால் வந்த வினை..சிறுமி சென்று தூங்கிய இடம் எது தெரியுமா? கண்டுபிடித்த டிரோன்..

By John A

Published:

உலகில் பெரும்பாலான சிறுவர் சிறுமியர்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகம் இருக்கலாம். பள்ளியில் நடந்தவை, நண்பர்களுடன் விளையாடுவது என அன்றைய தினம் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தன்னை அறியாமல் பேசுவர். ஆங்கிலத்தில் இதனை Parasomnia என்று கூறுவர்.

இது தூக்கத்தில் பேசுவது மட்டும் கிடையாது தூக்கத்தில் நடப்பதும் ஒரு வகையான உளவியல் கோளாறே. பெரும்பாலும் தூக்கத்தில் பேசும் பழக்கம் ஒருகட்டத்தில் மாறி விடும். ஆனால் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே சரிவர கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேலும் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் இதனையும் சரி செய்யலாம். இந்நிலையில் அமெரிக்காவினைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை உள்ளது. இந்த வியாதியால் அவர் சுமார் 1.5 கிலோமீட்டர் தன்னையே அறியாமல் நடந்து சென்று தோப்பினுள் சென்று தூங்கியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த விஜய்டிவி புகழ்… இன்ஸ்டாவில் போட்ட நெகிழ்ச்சிப் பதிவு

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகானத்தில உள்ள 10 வயது சிறுமிக்குத் தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இரவு 9 மணிக்கு வழக்கம் போல் தனது அறையில் தூங்கச் சென்றிருக்கிறார் சிறுமி. ஆனால் 11 மணியளவில் அவளது பெற்றோர் பார்த்த நிலையில் சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக உள்ளுர் நிர்வாக அதிகாரிக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் சிறுமியின் பிரச்சினையைக் கேட்டு அதன்படி நான்கு புறங்களிலும் சுமார் 64 கிலோமீட்டர் டிரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த தோப்பினுள் சென்று தூங்கியிருக்கிறார். இதனை டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்து சிறுமியை மீட்டிருக்கின்றனர்.