அமெரிக்காவில், 4 வயது சிறுவன் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து, “என் அம்மாவை உடனே வந்து கைது செய்யுங்கள்!” என்று அழுது கொண்டே பதட்டத்துடன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவசர போலீசார் அந்த இடத்திற்கு சென்ற போது, அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
அமெரிக்காவின் விஸ்கான்சிங் மாகாணத்தில், 4 வயது சிறுவன் திடீரென 911 அழைத்து, “என் அம்மாவை உடனே வந்து கைது செய்யுங்கள்!” என்று கூறியுள்ளார். மறுமுனையில் இருந்த போலீசாருக்கு, என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதனை அடுத்து, “என்ன நடந்தது?” என்று கேட்க, அந்த சிறுவன் அழுது கொண்டே இருந்தான்.
உடனடியாக, போலீசார் “ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது” என்று நினைத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்றபோது, 4 வயது சிறுவனும் அவனது அம்மாவும் சிரித்து கொண்டே இருந்தனர். போலீசார், “எதற்காக அழைப்பு வந்தது?” என்று கேட்டபோது, அந்த சிறுவன், “என்னுடைய அம்மா எனக்காக வைத்திருந்த ஐஸ்கிரீமை தின்றுவிட்டார்! எனவே தான் கைது செய்ய சொல்லி உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் இப்போது தேவையில்லை. எனக்கு புது ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டார்!” என்று பதிலளித்தான்.
பதற்றத்துடன் வந்த போலீசாருக்கு, சிறுவன் சொன்னதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது! உடனே, அவர்கள் சில ஐஸ்கிரீம்களை வாங்கி அந்த சிறுவனுக்கு கொடுத்து, “இனிமேல் அம்மாவை கைது செய்ய வேண்டும் என்று போன் செய்ய கூடாது!” என்று அறிவுரை கூறினர்.
இது குறித்த வீடியோவை போலீசார் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
