1700 ஆண்டுகள் பழமையான முட்டை.. உள்ளே இருப்பதை ஸ்கேன் செய்து பார்த்ததும் அரண்டு போன ஆய்வாளர்கள்

By Ajith V

Published:

இந்த உலகை நாம் தோண்ட தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள நிறைய வியப்பான விஷயங்களை நாம் ஆராய்ச்சிகளின் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்த பூமிக்குள் ஏராளமான விஷயங்கள் புதைந்து கிடக்கும் அதே வேளையில் ஏது தொடர்பாக உலகின் பல இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் நிறைய அகழ்வாராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றுள் பலவும் நாம் கேட்கும் பலருக்கு ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்க கூடிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட 2000 ஆண்டுகள் பழக்கம் இருக்கும் ஒயின் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததும் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்திய காலத்தில் இங்கிலாந்தில் ஒரு குழிக்குள் கிடைத்த கண்டுபிடிப்பு, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பறவையின் முட்டை இருந்ததுடன் அதன் பின்னணியும் தற்போது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

இங்கிலாந்தில் அமைந்துள்ள பக்கிங்ஹாம்ஷயர் என்னும் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கே இருந்து ஒரு குழியை தோண்டிய சமயத்தில் அனைவருக்குமே மிகப்பெரிய ஒரு பிரம்மிப்பு காத்திருந்தது. இங்கே மொத்தம் நான்கு முட்டைகள் இருந்துள்ள நிலையில் அவை 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நான்கு முட்டைகளில் இரண்டு முட்டைகள் உடைந்து போயிருந்த நிலையில் மற்ற இரண்டு முட்டைகள் மட்டும் நல்ல நிலையில் இருந்துள்ளது. அதில் ஒரு முட்டை ஆராய்ச்சி நடந்த சமயத்தில் உடைந்து போக மற்றொரு முட்டை மட்டும் தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக முட்டைகள் நூறு ஆண்டுகளுக்குள் உடைந்து போகும் நிலையில் இந்த முட்டை 1700 ஆண்டுகளாக உடையாமல் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது. இதில் மற்றொரு சுவாரஸ்யமாக இதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் இருந்த திரவங்கள் அப்படியே இருந்ததும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மேலும் இந்த முட்டை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சமயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பறவையினம் எது என்பது குறித்தும் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.