இன்று Xiaomi தனது இரண்டு புதிய Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Ultra ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் புதிய Snapdragon 8 Elite சிப்செட் அம்சங்கள் கொண்டது.
Xiaomi 15 குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் போன் விரும்புவோருக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், Xiaomi 15 Ultra சிறந்த கேமரா செயல்திறனை எதிர்பார்த்தவர்களுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
Xiaomi 15: 6.36 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்க்ரீன் கொண்டது. Xiaomi 15 Ultra: 6.73 இன்ச் 2K 120Hz AMOLED ஸ்க்ரீன் கொண்டது. இரு ஸ்மார்ட்போனில் HyperOS 2 இயங்குதளம் உள்ளது. மேலும், IP68 தரநிலையுடன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு வசதி வழங்கப்படுகிறது.
கேமரா விவரங்கள்:
Xiaomi 15:
50MP முதன்மை கேமரா
50MP அல்ட்ரா வைடு சென்சார்
50MP டெலிபோட்டோ லென்ஸ்
Xiaomi 15 Ultra:
50MP முதன்மை கேமரா
50MP அல்ட்ரா வைடு
50MP டெலிபோட்டோ
200MP பெரிஸ்கோப் லென்ஸ் (Leica ஒப்புநிலை)
இந்த இரு போன்களிலும் பல AI அம்சங்கள் உள்ளன. அவற்றில் சில இதோ:
AI Dynamic Wallpapers
AI Search
AI Gesture Reactions
AI Art
AI Subtitles
AI Writing
AI Speech Recognition
பேட்டரி மற்றும் சேமிப்பகம்:
Xiaomi 15:
12GB RAM + 512GB ஸ்டோரேஜ்
5,240mAh பேட்டரி
Xiaomi 15 Ultra:
16GB RAM + 512GB ஸ்டோரேஜ்
5,410mAh பேட்டரி
விலை மற்றும் சிறப்பு சலுகைகள்
Xiaomi 15: ரூ.64,999 . ஏப்ரல் 2-ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது என்றாலும் மார்ச் 19-ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். இந்த போன் வாங்குபவர்களுக்கு ரூ.5,999 மதிப்புள்ள Xiaomi Care Plan இலவசம். மேலும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை சலுகை.
Xiaomi 15 Ultra: விலை ரூ.1,09,999. முன்பதிவு செய்தால் Photography Kit Legend Edition இலவசம். மேலும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை சலுகை வழங்கப்படும்.