Xiaomi நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Civi 3: இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Published:

Xiaomi நிறுவனத்தின் Civi 3 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்னும் ஒருசில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi நிறுவனத்தின் Civi 3, MediaTek Dimensity 8200-Ultra SoC மூலம் இயக்கப்படுகிறது. 120Hz அம்சத்துடன் 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 50எம்பி மெயின் சென்சார், 13எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. Xiaomi Civi 3 ஆனது 12GB ரேம் மற்றும் 512GB சேமிப்பகத்துடன் வருகிறது. இது 4500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Xiaomi Civi 3 கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 8GB/128GB மாடலின் விலை சீன கரன்ஸியில் 2,499 என்றும், 12GB/256GB மாடலின் விலை சீன கரன்ஸியில் 2,699 என்றும், 12GB/512GB மாடலின் விலை சீன கரன்ஸியில் 2,999 என்றும் விற்பனையாகி வருகிறது.

Xiaomi Civi 3 ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ:

* 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் ரெசலூசன் மற்றும் 120Hz டிஸ்ப்ளே

* MediaTek Dimensity 8200-Ultra SoC பிராஸசர்

* 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம்

* 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி ஸ்டோரேஜ்

* 50MP பிரதான சென்சார், 13MP அல்ட்ராவைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார்

* 32MP சென்சார் செல்பி கேமிரா

* 4500mAh பேட்டரி, 67W வேகமாக சார்ஜிங்
* ஆண்ட்ராய்டு 13 உடன் MIUI 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மேலும் உங்களுக்காக...