உலகின் பல வல்லரசு நாடுகளும் விண்வெளிக்கு பல்வேறு செயற்கைக் கோள்களையும், மனிதர்களையும் அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நிலவுக்குச் சந்திரயான், செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் என அதிநவீன செயற்கைக் கோள்களை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக நடக்கும் ஓர் ஆய்வு தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா இல்லையான என்பது.
தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. நாசா கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் இண்சைட் லேண்டர் (Mars Insight Lander) என்ற விண்கலத்தினை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி அங்கு கடந்த 2022 வரை ஆய்வுப் பணியை மேற்கொண்டது. மேலும் அங்கு நில அதிர்வுகள், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் போன்றவற்றையும் அந்த லேண்டர் ஆராய்ச்சி செய்தது.
ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலைகள்.. இந்த மாதம் மட்டும் 8000 பேர் வேலையிழப்பு..!
தற்போது லேண்டர் அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11.5 கி.மீ முதல் 20 கி.மீ வரை நீரின் தடயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தண்ணீர் திரவ வடிவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பூமியைப் போலவே மனிதர்கள் வாழக் கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கிறதா என செவ்வாய் கிரகத்தினைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது தண்ணீரின் தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது விரைவிலேயே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறலாம் என்ற நம்பிக்கைக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.