Vivo, இந்தியாவில் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை AI அம்சத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மூன்று விதங்களில் கிடைக்கும் இந்த போனின் அடிப்படை மாடலின் விலை ரூ.13,999 மட்டுமே. இதன் விவரங்கள் இதோ:
6GB + 128GB – ரூ.13,999
8GB + 128GB – ரூ.14,999
8GB + 256GB – ரூ.16,999
மேலும் HDFC, SBI, மற்றும் Axis Bank கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.
Vivo T4x 5G ஸ்மார்ட்போன் மார்ச் 12, 2025 முதல் Flipkart, Vivo India e-store, மற்றும் சில்லறை கடைகளில் கிடைக்கும்.
Vivo T4x 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
6.72-inch LCD டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், 1050 nits பிரைட்னஸ்,
அதிகபட்சம் 8GB விரிவாக்கக்கூடிய RAM மற்றும் UFS 3.1 சேமிப்பு விரைவான டேட்டா ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் 6500 mAh பேட்டரி – 44W Flash Charge மூலம் 40 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்யலாம். USB-C to USB-C மூலம் ரிவர்ஸ் சார்ஜ் வசதியும் உண்டு.
50MP AI பிரதான கேமரா, 4K வீடியோ பதிவு, AI Erase, AI Photo Enhance, Night Mode போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உண்டு.